உலகின் 100 சிறந்த பார்களில் இதுவும் ஒன்று!



உலகின் 100 சிறந்த பார்களில் ஒன்றாக தில்லியில் உள்ள ‘சைட்கார்’ இடம்பிடித்துள்ளது. 91வது இடம் என்றாலும் இந்தியாவில் உள்ள வேறு எந்த பாரும் இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாரின் உரிமையாளர் ஒரு பெண் என்பதுதான் ஹைலைட்.ஆம்… தில்லியில் வசிக்கும் மீனாட்சி சிங், ஹோட்டல் நிர்வாகம் குறித்த படிப்பை முடித்ததும், பார்டெண்டிங் அண்ட் மிக்ஸோலஜி (bartending and mixology) பற்றிய துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். சொந்தமாக ஒரு பார் நடத்துவதை தன் கனவாகக் கொண்ட மீனாட்சி, 2018ம் ஆண்டு தனது வழிகாட்டியும், மூத்த பார்டெண்டர் நிபுணருமான யாங்தூப் லாமாவுடன் இணைந்து சைட்கார் என்ற பெயரில் பாரை தொடங்கினார்.  

2000-களின் முற்பகுதியில் ஹோட்டல் நிர்வாகம் படித்துக் கொண்டிருந்த மீனாட்சி தனியார் நிகழ்வுகளையும், விருந்துகளையும் பார்டெண்டிங் செய்யத் தொடங்கினார். அந்த நேரம் இந்தியாவில் பெண்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டவிரோதம். 2007ல் இந்த சட்டம் முதன் முதலாக ரத்து செய்யப்பட்டது.

இந்த விஷயத்தில் முடிவெடுப்பதற்கும் சட்டமியற்றுவதற்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உரிமை அளித்தது. 2010க்குப் பிறகு தான் தில்லியில் பெண்களுக்கு எதிரான பார்டெண்டிங் சட்டத்தை இந்திய அரசு ரத்து செய்தது.  அதன்பிறகு குருக்ராமில் ஸ்பீக்கஸி என்ற பாரை நிறுவ லாமாவுடன் மீனாட்சி ஜோடி சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து தொடங்கிய ‘சைட்கார்’ பார் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற பார்களில் ஒன்றாக மாறிவிட்டது!  

தொகுப்பு: அன்னம் அரசு