முகம் மறுமுகம்-ஓவியர் பார்வதி!



சோஷியல் மீடியாக்களில் வளைவு
நெளிவுகளில் அள்ளும் செம மாடர்ன் மயில்.
வெள்ளித்திரையில் நேட்டிவிட்டி
ரோலில் மினுங்கும் மிராக்கிள்.
அஜித்தின் ‘என்னை அறிந்தால்’,
கமலின் ‘உத்தம வில்லன்’
உதயநிதியின் ‘நிமிர்’ என ஏகப்பட்ட
படங்களில் ஸ்கோர் செய்தவர் பார்வதி நாயர்.

ஹீரோயினாகத்தான் நடிப்பேன்... என பிடிவாதம் பிடிக்காதவர் என்பதால் மலையாளம், கன்னடத்திலும் கலகலக்குகிறார் பார்வதி.
இவர், ஆக்ட்ரஸ் மட்டுமல்ல... ஒரு கைதேர்ந்த ஓவியரும் கூட! ‘‘இந்த ஊரடங்கு காலத்துல வீட்ல அதிக நேரம் செலவழிக்க முடியுதேனு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் பெங்களூருவிலுள்ள என் வீட்ல இல்லையேன்னு கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு. ஏன்னா, இப்ப நான் சென்னைலதான் இருக்கேன். ‘ஆலம்பனா’ பட ஷூட் போயிட்டு இருந்ததால இங்க  இருக்க வேண்டியதாகிடுச்சு. பாதி படத்துக்கு மேல ஷூட் போயிடுச்சு. அந்த டைம்லதான் ஷட் டவுன்... லாக் டவுன்னு ஆகிடுச்சு.  

இந்த டைம்ல என்னோட ஹாபியான பெயின்ட்டிங் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்கேன். நிறைய டைம் கிடைக்கறதால இன்னொரு விஷயமும் பண்ணிட்டிருக்கேன். வீட்ல இருக்கறதால உலக படங்கள்ல இருந்து உள்ளூர் சினிமா வரை வரிசையா லிஸ்ட் போட்டு பார்த்து ரசிச்சிட்டிருக்கேன். என் கேரியருக்கும் கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்குமில்லையா..?’’ கேட்கும் பார்வதி, பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்.

‘‘பூர்வீகம் கேரளானாலும், நான் பிறந்தது துபாய்லதான். படிச்சது, வளர்ந்து எல்லாமே அங்கயும் பெங்களூர்லயும்தான். எங்க அம்மாகிட்ட இருந்துதான் இந்த ஓவிய ஹாபி எனக்கும் வந்திருக்கு. எங்க வீட்ல ஹால்ல இருந்து அத்தனை ரூம்கள்லயும் அம்மாவின் கைவண்ணம் மிளிரும். அவ்ளோ அழகா ஓவியங்கள், எம்பிராய்டரினு செய்து அசத்தறாங்க.

அம்மாவைப் பார்த்து எனக்கும் ஓவியங்கள் மீது காதல் வந்துடுச்சு. ஸ்கூல் படிக்கும்போதே, பெயின்டிங் காம்படிஷன்ல கலந்துக்குவேன். நிறைய பரிசுகளும் வாங்கியிருக்கேன். அந்த டைம்ல உலகின் நீளமான ஓவியம் வரைஞ்சு மாணவர்கள் செய்த கின்னஸ் சாதனைல நானும் பங்கேற்று சர்டிஃபிகேட்டும் வாங்கியிருக்கேன்.

என் ஆரம்பகால ஓவியங்கள் எல்லாமே குழந்தைத்தனமா இருக்கும். அப்புறம்தான் சித்திரமும் கைப்பழக்கம் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ் ஆகிச்சு...’’ என்று சொல்லும் பார்வதி, ஓவியம் தொடர்பாக எந்த கோர்ஸும் படிக்கவில்லையாம்.  

‘‘என் ஓவியங்கள்ல ரொமான்டிக் ஸ்பார்க் மின்னும். காலேஜ்ல கிளாஸ் போர் அடிச்சா உடனே வரைய ஆரம்பிச்சிடுவேன். டார்க் ஷேட் அதிகம் பிரதிபலிக்கும் ஓவியங்கள்தான் என் சாய்ஸ். ஒரு படம் முழுமை பெற எவ்வளவு நாளாகும்னு ஆரம்பத்துலயே சொல்ல முடியாது.

இத்தனைக்கும் நான் ரொம்ப ஸ்பீடு கேர்ள். சாப்பிடும் போதுகூட ரொம்ப ஃபாஸ்ட்டா சாப்பிட்டு முடிச்சிடுவேன். ஒர்க் விஷயத்திலும் அப்படிதான். வேகம். வேகம்தான். ஆனா, ரெண்டே நாள்ல பெயின்ட்டிங் கம்ப்ளீட் ஆனதும் உண்டு. மாசக்கணக்கா டைம் எடுத்து வரைஞ்ச ஓவியங்களும் உண்டு...’’ புன்னகைக்கும் பார்வதி, தான் வரைந்த ஓவியங்கள் எதையும் அவர் வைத்துக் கொள்ளவில்லையாம். நட்பு வட்டத்துக்கு அப்படியே கொடுத்து விடுவாராம்.

‘‘ஆனா, ‘என்னை அறிந்தால்’ நேரத்துல நான் அஜீத் சாரை ஓவியம் வரைந்து பரிசா கொடுத்தேன்னு நியூஸ் வந்தது இல்லையா... அது உண்மை இல்ல. அவரை ஓவியமா வரைஞ்சு கிஃப்ட் பண்ற ஐடியா இருந்தது உண்மைதான். பட் அந்தப் படத்துக்கு அப்புறமா அவரை நான் சந்திக்கற சான்ஸ் அமையல.

லேட்டஸ்ட்டா ஒரு மாடர்ன் ஆர்ட் வரைஞ்சேன். என்னோட ஃப்ரெண்ட் பர்த் டேவுக்கு அதை கிஃப்ட்டா கொடுத்தேன்.
ஒவ்வொரு முறையும் பெயின்ட் பண்றப்ப ஒரு கண்காட்சி நடத்தணும்னு தோணும். ஆனா, வரைஞ்சு முடிச்சதும் நட்புகளுக்கு அதை பரிசா கொடுப்பதுதான் சரினு முடிவு பண்ணிடுவேன்!

மாடலிங்தான் என்னை சினிமாக்கு கொண்டு வந்தது. சினிமாவுக்கு வந்த பிறகும் என்னை ரிலாக்ஸ் பண்றது பெயின்ட்டிங்தான்...’’ என புன்னகைப்பவரின் டாபிக், சினிமா பக்கம் திரும்பியது.‘‘இப்ப கன்னடத்துல காதல் படங்கள் நிறைய வருது. மலையாளத்துலயும், தமிழ்லயும் லவ் ஜானர்கள் கம்மியாகிடுச்சு. ஆனா, நான் எல்லா ஜானர்கள்லயும் நடிக்க விரும்பறேன். நான் காலேஜ் முடிக்கும் வரை வில்லேஜ் பக்கமே போனதில்ல. என் ரியல் லைஃப்ல மாடர்ன்னா இருந்தாலும் படங்கள்ல எனக்கு நேட்டிவிட்டி ரோல்கள்தான் அமைஞ்சிருக்கு.  

இப்பவும் மாடலிங் துறைலயும், ஃபேஷன்லயும் அப்டேடட் ஆக இருக்கேன்; இருப்பேன். துபாய், திருவனந்தபுரம், பெங்களூருனு வளர்ந்தால கிராமங்களைப் பார்த்ததில்ல. அதுக்கான வாய்ப்பும் அமையல. நான் நடிக்க வந்த பிறகுதான் கிராமங்களை நேர்ல பார்க்கும்
சந்தர்ப்பம் கிடைச்சது.

கிராம மக்கள் எப்படி பழகுவாங்க... அவங்க பாடிலாங்குவேஜ் எல்லாமே நான் ஷூட்டிங் போய்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
இப்ப நடிக்கற ‘ஆலம்பனா’ ஒரு ஃபேன்டஸி மூவி. இதுவரை நான் பண்ணாத கேரக்டர். இதுவரை நான் நடிச்ச படங்கள் எல்லாமே தானாக அமைஞ்ச படங்கள்தான். ‘வெள்ள ராஜா’ வெப் சீரீஸுக்கு பிறகு மறுபடியும் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் பக்கம் போகல. நிறைய ஆஃபர்ஸ் வருது. ஆனா, எனக்கு கதை, கேரக்டர் செட் ஆகல.

சமீபத்துல மும்பைக்கு போய் ஒரு சீரீஸின் கதை கேட்டேன். அதுவும் செட் ஆகல. சினிமா விஷயத்தில் எந்த அவசரமும் இல்ல. ஸ்லோ அண்ட்
ஸ்டெடிதான் என் பாலிஸி...’’ என்கிற ஓவியர் பார்வதி, ஒரு கவிஞரும் கூட!

‘‘ரெகுலரா எழுதுற கவிஞர்னு சொல்லிட முடியாது. டிராவல்ல தோன்றதை எல்லாம் அப்படியே ஒரு டைரில எழுதி வச்சிருக்கேன். எல்லாமே ஆங்கிலத்தில் எழுதினதுதான். கவிதைகளை தாண்டி, எனக்குள் ஒரு பாடகியும் இருக்கா. நான் சின்ன வயசில முறைப்படி கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டேன். அது இப்பவும் கைகுடுக்குது.

மியூசிக் கேட்க ரொம்ப பிடிக்கும். ஒரு பாடகியாகவும் பெயர் எடுக்க விருப்பமிருக்கு. கொஞ்சம் பிராக்டீஸ் பண்ணிட்டு மியூசிக்ல குதிக்கலாம்னு இருக்கேன். புரொஃபஷனல் சிங்கர்னு பெயர் எடுக்கறது ஈஸி கிடையாது. ஆனாலும் என்னால நல்லா பாடமுடியும்னு நம்புறேன்.
படங்கள்ல பாட சான்ஸ் அமைஞ்சா, ஒரு கை பார்க்க ரெடியாத்தான் இருக்கேன். இப்ப ‘ஆலம்பனா’ தவிர தமிழ்ல ரெண்டு படங்கள் கமிட் ஆகியிருக்கேன்...’’ என்கிறார் ஜில் சிரிப்புடன்!  

மை.பாரதிராஜா