COFFEE TABLE



மர்மப் புன்னகை

‘Fulfilling a Purpose’ என்ற அடைமொழியோடு இன்ஸ்டாவில் சிறகு விரிக்கிறார் கேத்தரின் தெரசா. அங்கே தன்னுடைய பர்சனல் விஷயங்களை அடக்கி வாசித்து, மர்மப் புன்னகை சிந்துகிறார். இருந்தாலும் விதவிதமாக போஸ்கள் கொடுத்தபடி புரொமோஷனுக்கான போட்டோ ஷூட்களையே பதிவிடுகிறார். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு எப்ப ஷிப்ஃட் ஆவீங்க கேத்தரின்?!

கொழுப்பில் நம்பர் ஒன்

இந்தியாவில் யார் அதிகமாக கொழுப்புள்ள உணவை உட்கொள்கின்றனர் என்ற ஆய்வு சமீபத்தில் நடந்தது. தில்லியும், அகமதாபாத்தும் டாப் இடங்களைப் பிடித்துள்ளன.தில்லி, அகமதாபாத்தில் வசிப்பவர்களில் சுமார் 5 ஆயிரம் பேரை சர்வே எடுத்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தினந்தோறும் பேக்கேஜ் உணவுகள், பால் பொருட்கள், பேக்கரி அயிட்டங்களை சரமாரியாக எடுத்துக்கொள்கின்றனர்.அசைவத்தை விட சைவ உணவுப்பிரியர்களே கொழுப்பு சார்ந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதுதான் இதில் ஹைலைட்.

கொரோனா ஹோலி

புனேயில் தன் காதல் கணவர் நிக்கோடு ஹோலியைக் கொண்டாடிஇருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா. இன்னொரு பக்கம் தன் ரசிகர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுகிறார். இன்ஸ்டாவில் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பயனுள்ள டிப்ஸை அள்ளித் தெளிக்கிறார்.
‘‘இரு கைகள் கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும்...’’ என வலியுறுத்தும் அவர், அப்படியே, தான் வணக்கம் கூறும் போஸ்களை எல்லாம் தொகுத்து, வீடியோவாக பதிவிட்டு ஹார்ட்டின்களைக் குவிக்கிறார்.

வைரல் ஆன மனிதநேயம்

கொரோனா வைரஸின் பெயர் அடிபடாமல் இப்போது எந்தச் சம்பவமும் வைரலாவதில்லை. இதற்கு உதாரணம் இந்தச் சம்பவம். கேரளாவின் வயநாட்டில் கொரோனா வைரஸ் பாதித்திருக்குமோ என்று நிறைய பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் இலவசமாக புத்தகங்களை விநியோகம் செய்கிறது. இந்தப் புத்தகங்கள் கூட மக்களிடமிருந்து அன்பளிப்பாக பெறப்பட்டவையே. இந்த மனிதநேய நிகழ்வு செம வைரலாகிவிட்டது.

லைட் போன்

முதல் தடவையாக ‘லைட்’ வகை ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்துகிறது ‘ஒன்பிளஸ்’. அந்த புது மாடலின் பெயர் ‘ஒன்பிளஸ் 8 லைட்’. 6.4 இன்ச்சில் மெகா டிஸ்பிளே, மூன்று பின்புற கேமராக்கள், செல்ஃபி கேமரா, யூஎஸ்பி டைப் போர்ட், 4000mAh பேட்டரி திறன் என அசத்துகிறது. விலை ரூ.37,400.              

குங்குமம் டீம்