இந்தியன் தாத்தா வருவாரா?!விக்கிபீடியா எனும் டிஜிட்டல் என்சைக்ளோபீடியா தனது சேவையை இந்தியாவில் நிறுத்திக்கொள்கிற சூழலுக்குத் தள்ளப்பட்டால் விக்கித்து நிற்கப் போகிறவர்கள் அதன் இலட்சக்கணக்கான பயனாளர்களே தவிர, அதற்குக் காரணமான அரசு அல்ல.
- சக்குராம்கி, மடிப்பாக்கம்; கைவல்லியம், மானகிரி; மனோகரன், கோவை; கதிரவன், மதுரை; நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.

இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பிணக்கு ஏற்படுத்த முயற்சி நடக்கும் சமயத்தில் மடாதிபதியான இஸ்லாமியர் பற்றிய தகவல் மத ஒற்றுமையின் அடையாளத்தை உணர்த்திவிட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; ப.மூர்த்தி, பெங்களூரு; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; யாழினி பர்வதம், சென்னை; நெல்லைகுரலோன், பொட்டல்புதூர்; கருணாகரன், போரூர்.

விஷாலின் ‘சக்ரா’வுக்கு டைரக்டர் எழிலின் உருவாக்கமான எம்.எஸ்.ஆனந்தன் ‘அச்சாணி’யாகியிருப்பதால் நன்றாக ஓடும் என்கிற எதிர்பார்ப்புக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.
- ஜெர்லின், ஆலந்தூர்; கீதா, கோவில்பட்டி; பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்; ஜெயராமன்,
கோவிலம்பாக்கம்.

‘திரெளபதி’ படத்தின் இயக்குனர் மோகன்.ஜி கோபமூட்டும் கேள்விகளுக்கும் மனப்பக்குவத்துடன் பதில் அளித்தது பாராட்டுக்குரியது.
- மனோகர், மேட்டுப்பாளையம்; இலக்சித், மடிப்பாக்கம்; செம்மொழி, சேலையூர்; பப்பு, அசோக் நகர்; விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஆசிகா, வியாசர்பாடி; சரண் சுதாகர், வேளச்சேரி.
 
நீட் தேர்வு முறைகேடுகள், குளறுபடிகள், ஆள் மாறாட்டம் போன்றவை நீங்க தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெற வேண்டும். அல்லது பிளஸ் 2 மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து மருத்துவ சீட் தரவேண்டும் என்ற கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. அரசு இதை பரிசீலிக்க வேண்டும்.
- ரா.புனிதவதி, பொள்ளாச்சி; மனோகர், மேட்டுப்பாளையம்; ஜெயசந்திர பாபு, மடிப்பாக்கம்; பிரேமா, சென்னை; பிரேம்குமார், அரிமளம்; முரளி, நங்கநல்லூர்.  

மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது வாங்கி சாதித்துள்ள கே.வி.ஜெயயின் அனைத்து எதிர்கால முயற்சிகளும் ஜெயமாகும்.
- ஜெயராமன், கோவிலம்பாக்கம்; மியாவ்சின், சென்னை; நிலவழகு, நீலாங்கரை; இராம.கண்ணன், திருநெல்வேலி.

‘இந்தியன் 2’ விபத்தில் வெளியில் வராத உண்மை (குற்றவாளி)யை அடையாளம் காட்டி விட்டீர்கள். இதில் மறைந்துள்ள மற்ற உண்மைகளைக்
கண்டுபிடிக்க இந்தியன் தாத்தாதான் வரவேண்டும்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; ப.மூர்த்தி, பெங்களூரு; மனோகர், மேட்டுப்பாளையம்; வேலு, உள்ளகரம்; கணேசன், திருமருகல்.

ரீடர்ஸ் வாய்ஸ்