விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்கிறார் ஜெயம் ரவி!‘‘என்னோட ஒவ்வொரு படமுமே ஒவ்வொரு ஜானர்ல இருக்கணும்னு விரும்பறேன். ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’னு வித்தியாசமான முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. குறிப்பா ‘போகன்’ல கூடுவிட்டு கூடுபாயும் விஷயத்தை காமெடியாக்காம விறு விறுப்பாக்கியிருப்பேன்.
மக்கள் ஆரவாரத்தோடு அதை அங்கீகரிச்சாங்க.எனக்கும் ஜெயம் ரவிக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு. பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும்தான் தொடர்ந்து எங்களைப் பயணப்பட வைக்குது. எங்க காம்பினேஷன்ல வரும் படம் மெகா ஹிட் ஆக இதுதான் காரணம்.

இதோ ஹாட்ரிக் வெற்றியை நாங்க ரெண்டு பேரும் கொண்டாட மூணாவது முறையா ‘பூமி’ படத்துல இணைஞ்சிருக்கோம்.
இந்த முறை நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் பிரச்னையை நேர்மையாக சொல்லியிருக்கேன். நாம வீட்ல சாப்பிட்டாலும், வெளியே ஆர்டர் பண்ணி சாப்பிட்டாலும் நமக்கு சோறு போடுறது அவங்கதான்.

அப்படி வணக்கத்துக்குரிய விவசாயிகளின் பிரச்னைகளுக்கு இதுல ஒரு நேர்மையான தீர்வை சொல்லியிருக்கேன்...’’ மனநிறைவோடு பேசுகிறார் ‘பூமி’ இயக்குநர் லக்‌ஷ்மன்.அப்படி என்ன பிரச்னையை பேசியிருக்கீங்க?‘பூமி’யோட டிரெய்லர்ல ஜெயம்ரவி ஒரு கேள்வி கேட்பார்... ‘நாட்டோட எல்லா வளங்களையும் நாசம் பண்ணிட்டு நீங்கல்லாம் என்ன சார் பண்ணப்போறீங்க?’இப்படி அவர் கேட்டபிறகு என்ன நடக்குது என்பதுதான் கதை. கமர்ஷியலா, விறுவிறுப்பா, சுவாரஸ்யமா அதேநேரம் படம் பார்க்கறவங்க சிந்திக்கற மாதிரி சொல்லியிருக்கோம்.

‘போகன்’ முடிச்சுட்டு ஆந்திரா பக்கம் போயிட்டேன். அங்குள்ள விவசாயிகளோடு சில மாசம் பழகினேன். அவங்க வாழ்க்கை முறையைப் பார்த்து நெகிழ்ந்துட்டேன். ரெண்டு விவசாயிகள் பக்கத்து பக்கத்து வயல்கள்ல நெல் பயிரிட்டிருந்தா, அதோட விளைச்சலை ஆண்மையா பார்க்கறாங்க. ‘என் கதிர்கள் நிமிர்ந்து நிற்குது...’னு பூரிக்கிறாங்க. காசு பணத்தை கைநீட்டி வாங்க மறுக்கறாங்க. ‘அப்படி கீழ வச்சுடுங்க. நான் எடுத்துக்கறேன்’னு சொல்லி தரைல பணத்தை வைக்கச் சொல்றாங்க. ஏன்னா, கைல பணம் வாங்கினா, அது கடன் வாங்குவதற்கு சமமாம்!

இந்தளவுக்கு மானத்தை உயிரா நினைக்கறாங்க. அங்குள்ள விவசாயிகளின் பிரச்னைகளைப் பார்த்தப்ப ஒரு விஷயம் ஸ்டிரைக் ஆச்சு. நம்ம ஊர் விவசாயிகளின் பிரச்னை என்ன..? இதைத் தெரிஞ்சுக்க நினைச்சு தமிழக கிராமங்களுக்குப் போய் ஃபீல்ட் ஒர்க் பண்ணினேன். இதெல்லாம் முடிச்சுட்டு தான் ‘பூமி’ ஸ்கிரிப்ட்டையே எழுதினேன். ஜெயரம் ரவி இதுக்குள்ள எப்படி வந்தார்..?

பிள்ளையார் சுழி போட்டதுமே! ஆமா... ஸ்கிரிப்ட் எழுதறப்பவே ஜெயம் ரவிதான் மனசுல வந்தார். சமூகத்தின் மீதான அக்கறையும், கோபமும் இயல்பாகவே அவர்கிட்ட இருக்கு. அதை பல சந்தர்ப்பங்கள்ல கண்ணுக்கு நேரா நானே பார்த்திருக்கேன்; உணர்ந்திருக்கேன். ஸோ, பக்காவா ரெடிமேட் சட்டை மாதிரி என் கேரக்டருக்கு அவர் சூட் ஆனார்!

ஜெயம் ரவிக்கு ஜோடியா நிதி அகர்வால் நடிச்சிருக்காங்க. இவங்க தவிர சரண்யா பொன்வண்ணன், தம்பிராமையா, ரோஹித் ராய், சதீஷ், மாரிமுத்துனு நிறைய பேர் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்காங்க. சென்னை, பொள்ளாச்சி ஏரியாக்கள் தவிர பாங்காக்லயும் ஷூட் பண்ணியிருக்கோம்.

டெக்னீஷியன்ஸ்..?
சொல்லவும் வேண்டுமா..? பக்காவா அமைஞ்சிருக்கு. விஷால் நடிச்ச ‘ஆக்‌ஷன்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த டட்லி தான் ‘பூமி’க்கு கேமராமேன். இசை டி.இமான். என்னை நூறு சதவிகிதம் புரிஞ்சவர். பாடல்கள் அத்தனையும் ஹிட் அடிக்கும். எப்படி டிரெய்லரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து கொண்டாடியிருக்காங்களோ அப்படி பாடல்களும் சக்சஸ் ஆகும்.

ரொமாண்ட்டிக் பாடல்கள் தவிர ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’னு ஒரு பாட்டு இருக்கு. நிச்சயம் எல்லாரோட ரிங் டோன், காலர் டியூனா அந்தப் பாடல் இருக்கும். படப்பிடிப்புல மறக்கமுடியாத விஷயங்கள்..?நிறைய உண்டு. பொள்ளாச்சில கிளைமாக்ஸ் ஷூட் பண்ணிட்டிருந்தோம். ஜெயம் ரவி நடிச்சிட்டிருந்தார். மானிட்டர்ல நானும் என் டீமும் ஒர்க் பண்ணிட்டிருந்தோம். என் மகளும் இந்தப் படத்துல அசிஸ்டென்ட்டா ஒர்க் பண்ணியிருக்கார்.

சரி விஷயத்துக்கு வர்றேன். எமோஷனலான சீன் அது. ரவி உணர்ச்சிபூர்வமா நடிச்சுட்டிருந்தார். நான் மானிட்டரை பார்த்துட்டே இருந்தேன்.
திடீர்னு என் பின்னாடி ரெண்டு பெண்கள் அழற சத்தம் கேட்டது. பதறிப் போய் திரும்பிப் பார்த்தா, அந்த ஊர் மக்கள்! ரவிகிட்ட சொன்னப்ப அவரும் நெகிழ்ந்துட்டார்.

இப்படி ஒரு எமோஷன் தியேட்டர்லயும் இருக்கும். ரவி சாரோட மாமியார் சுஜாதா விஜயகுமார்தான் படத்தை தயாரிச்சிருக்கார்.மூணாவது முறையா ஜெயம்ரவியோட கூட்டணி..?ஆமா. ஒரே ஹீரோவோடு அடுத்தடுத்து ஒர்க் பண்றதுல நிறைய ப்ளஸ் இருக்கு. ரவி என் நண்பராகவே ஆகிட்டார். இந்தப் படத்துல இன்னும் ஒரு ஸ்டெப் மேல போய் கோ டைரக்டராகவும் ஒர்க் பண்ணியிருக்கார்.

இந்தக் கதையை அவர்கிட்ட சொன்னதுமே ஆச்சரியப்பட்டார். ‘எப்படி இவ்வளவு அழுத்தமான சப்ஜெக்ட்டை பிடிச்சீங்க’னு ஆர்வமானார். படத்துல நிறைய டயலாக்ஸ் இருக்கு. எல்லாமே உங்க மனசைத் தொடும். அதேபோல ஹீரோயின் நிதி அகர்வால். பிசினஸ் மேனேஜ்மென்ட் முடிச்சுட்டு மாடலிங் வழியா சினிமால என்ட்ரி ஆகியிருக்காங்க. இந்தி, தெலுங்கு, கன்னடம்னு பல லாங்குவேஜ்கள்ல கலக்கிட்டு இருக்காங்க. பெல்லி டான்ஸ், கதக்னு எல்லாத்தையும் கத்து வைச்சிருக்காங்க.

அவங்களை தமிழுக்கு அழைச்சுட்டு வந்திருக்கோம். இனி இங்கயும் ஒரு ரவுண்ட் வருவாங்க. ஜெயம் ரவி சாரோட ஜோடியா நடிச்ச ஹீரோயின்ஸ் யாரும் சோடை போனதில்லையே! ஒரே ஹீரோவோடு அடுத்தடுத்து படங்கள் பண்றதுல மைனஸும் இருக்கு இல்லையா..?

ப்ளஸ் நிறையவே இருக்கே! ரவி சாருக்கு நாம லைன் கொடுத்தா போதும். அவர் ரோடே போட்டுடுவார். இன்னொண்ணு... நான் எந்த ஜானர் யோசிச்சாலும் அதுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவரா அவர்தான் இருக்கார். ஷூட் போறப்பவே அடுத்த படமும் அவரோடதான் செய்யணும்னு எல்லா இயக்குநருக்குமே தோணும். அந்தளவுக்கு அவர் ஃப்ரெண்ட்லி ஹீரோ.

மைனஸ்னு பார்த்தா... என்னை சந்திக்கறவங்கள்ல பலரும், ‘நீங்க ரவியோடயே மறுபடி மறுபடி படம் பண்ணிட்டிருக்கீங்களே’னு கேட்பதுதான். இதைத் தவிர வேற மைனஸ் இல்ல. இதையும் சொல்லிடறேன்... என் அடுத்த படமும் ஜெயம் ரவி கூடதான்! ஒரு கதையை ரெடி பண்ணிட்டு அதுக்கான ஹீரோவைத் தேடி அலையறது பெரிய பிராசஸ். எனக்கு நண்பரே ஹீரோவா இருக்கார். எனக்கு இந்த ட்ராவல் எளிதா இருக்கு. எல்லா படத்துக்குமே ஒரே உழைப்பைத்தான் கொடுக்கறோம். ஒரு கம்ஃபார்ட் டிராவல் அமையும்போது அந்த உழைப்பும் மகிழ்வான உழைப்பாகுது!

மை.பாரதிராஜா