இந்த உணவின் விலை ரூ.17,86,155



மெக்சிகோவின் பாரம்பரிய உணவு டாக்கோ.  சப்பாத்தி மாதிரியான ஒன்றினுக்குள் மீன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி அல்லது காய்கறிகளை வைத்து தயாரிக்கப்படும் உணவு இது.

இப்போது இந்த உணவு இந்தியாவிலும் கிடைக்கிறது. ஆனால், மெக்சிகோவில் உள்ள கிராண்ட் வெலாஸ் என்ற உணவகத்தில் உள்ள டாக்கோதான் வெகு பிரபலம். காரணம், பெலுகா கேவியர், கோபி பீப், லாங்கஸ்டைன், தங்க இலைகள், சல்சா என விலையுயர்ந்த உணவுப் பொருட்களைச் சேர்த்து அந்த டாக்கோவை தயாரிப்பதுதான்.

தவிர, டாக்கோவுடன் தரமான டக்கீலா மற்றும் காபியையும் கொடுக்கிறார்கள். இது அந்த உணவகத்தின் ஸ்பெஷல் என்பதால் கிராண்ட் வெலாஸ் டாக்கோ என்றே அதற்குப் பெயர்.  ஒரு கிராண்ட் வெலாஸ் டாக்கோவின் விலை 25 ஆயிரம் டாலர். அதாவது இந்திய மதிப்பில் 17,86,155 ரூபாய்!இந்த டாக்கோதான் உலகின் விலையுயர்ந்த உணவு.

த.சக்திவேல்