மி(பி)ன்னுது!



முகப்பில் ‘தர்பார்’ ஜோடி சும்மா தகதகன்னு மி(பி)ன்னுது தலைவா. இந்த வார ‘குங்குமம்’ பொங்கல் சிறப்பிதழ் என்பதைவிட திரைப்பட சிறப்பிதழ். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்பிதழ்!
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை; ப.மூர்த்தி, பெங்களூரு; தா.சைமன் தேவா, விநாயகபுரம்.

சிங்கப்பூரின் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு காஜல் அகர்வால் செல்லாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் மெழுகுச்சிலை டெலிவரி ஆகிவிட்டதென்று அவரையே நிறுவிவிடப்போகிறார்கள்.
- வேலு, உள்ளகரம்; கீதா, கோவில்பட்டி; கருணாகரன், போரூர்; மனோகரன், கோவை.

சமையல் கலைஞர் மகேஷ்வரன் வழங்கும் ‘சிறுதானிய பொங்கல் ஸ்நாக்ஸ்’ அனைத்தும் பார்த்தாலே வாயில் எச்சில் ஊறும் வண்ணம் சிறப்பாக உள்ளன. பாரம்பரிய சமையலுக்கும் பெருமை சேர்க்கிறது.
- மனோகர், மேட்டுப்பாளையம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை;  வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஆர்.ஜெ.சி, சென்னை; எம்.எஸ்.இப்ராகிம், சென்னை; கதிரவன், மதுரை.

விஜய்யின் ‘மாஸ்டர்’ லுக் தகவல்களைப் படித்தபோது, அப்படம் வெற்றியின் மான்ஸ்டராக எழுந்து நிற்கும் போலிருக்கிறது.
- அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; க.நஞ்சையன், பொள்ளாச்சி; முரளி, நங்கநல்லூர்; இலக்சித், மடிப்பாக்கம்; பிரேமா குரு, சென்னை.

அடுத்தடுத்து வரப்போகிற போட்டிப்படங்கள் எளிமையாக எடுத்துக்கொள்ளாத அளவுக்கு அஜித்தின் ‘வலிமை’ உருவாகி வருவது சூப்பர்.
- சத்யா, சென்னை; நெல்லை குரலோன், பொட்டல்புதூர்; நிலவழகு, நீலாங்கரை; சந்திரமதி, சென்னை; பிரேமா பாபு, சென்னை.

‘இதோ பார் ஒரு வெற்றிப்படம்’ என சொல்லாமல் சொல்கின்றன ‘தர்பார்’ பக்கங்கள்.
- செம்மொழி, சேலையூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; மியாவ்சின், கே.கே.நகர்.

கவிஞர் கார்த்திக் நேத்தாவின் ‘லவ் ஸ்டோரி’யில் உயர வித்தியாசம் கொண்ட காதலர்கள் மனதால் சமமாகிப் போனதைப் படிக்கவே ருசிகரமாக இருந்தது.
- ராஜம் தம்பையா, மாம்பலம்; பப்பு, அசோக் நகர்; கலிவரதன், கீழ்க்கட்டளை; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; மனோகர், மேட்டுப்
பாளையம்.

உலக அளவில் உடல் பருமன் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்பதை ‘குங்குமம்’ கோடிட்டுக் காட்டியுள்ளது.
- இராம.கண்ணன், திருநெல்வேலி; கதிர், கோவை.

முற்றிலும் மாறுபட்ட கட்டுரையாக இருந்தது ‘கன்னி வழிபாடு’. புதிய தகவல். அதே சமயம் புரட்சிகர தகவல். வழிபாட்டின் அவசியத்தையும் பயன்படுகிற வகையில் எடுத்துரைத்தது அருமை.
- ரா.புனிதவதி, பொள்ளாச்சி; ஆசிகா, வியாசர்பாடி; கவுரிநாத், பரங்கிமலை; கோவிந்தராஜ், தில்லை கங்காநகர்.

ரீடர்ஸ் வாய்ஸ்