COFFEE TABLE



ஷாட் கன் சோனாக்‌ஷி!

பாலிவுட் ‘தபங் 3’ புரொமோஷனுக்காக ஸ்டேட் ஸ்டேட்டாக பறந்து கொண்டிருக்கிறார் ‘லிங்கா’ ஹீரோயின் சோனாக்‌ஷி சின்ஹா.
இன்ஸ்டாவில் தனக்கு ‘shotgun junior’ என அடைமொழி கொடுத்துள்ளார். சமீபத்தில் வைரலான ‘முன்னா பட்நாம் சேலன்ச்’ டான்ஸ் மூவ்மெண்ட் செய்து அசத்தியதுடன், அதை வீடியோவாகவும் பதிவிட்டு, நான்கு லட்சம் லைக்குகளைக் குவித்துவிட்டார்.

டாப் மாடல் போன்

‘ஷியோமி’யின் சப்-பிராண்ட் ‘போகோ’வின் ‘எஃப் 1’தான் இப்போது விற்பனையில் டாப்.  6.18 இன்ச் மெகா டிஸ்பிளே, குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 பிராசஸர்... இவை அனைத்தும் 15 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் முக்கிய ஸ்மார்ட்போன் இதுவே.

தவிர, 12 எம்பியில் முதன்மை பின்புற கேமரா, 5 எம்பியில் டெப்த் சென்சார் பொருத்தப்பட்ட கேமரா என அளவாக இரண்டு கேமராக்கள், செல்ஃபிக்கு தனியாக 20 எம்பியில் ஒரு கேமரா, 64 ஜிபி ஸ்டோரேஜ், ஒரு நாள் முழுக்க சார்ஜ் நிற்க 4000 mAh பேட்டரி திறன், 6 ஜிபி ரேம் என அசத்துகிறது இந்த போன். விலை ரூ. 14,999.

டயர் இல்லாத கார்!

இங்கிலாந்தின் தெற்கு யாக்ஷயரில் ஒரு கார்தான் ஹாட் டாக். நண்பர்களுடன் மதுவருந்திய இளைஞர் ஒருவர் யாக்ஷயர் சாலையில் காரை ஓட்டி வந்திருக்கிறார். வழக்கத்துக்கு மாறாக அந்த கார் ஓடியிருக்கிறது. அருகில் போய் பார்த்தபோதுதான் காரில் ஒரு டயர் இல்லை என்பது தெரியவந்தது. அந்த இளைஞரை கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்துவிட்டது காவல்துறை. டயர் இல்லாத காரின் புகைப்படம் வைரலாகிவிட்டது.

ப்ரியம்கா

யுனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக செயல்படும் ப்ரியங்கா சோப்ரா, கடந்த வாரம் மத்திய அமெரிக்காவில் உள்ள குக்கிராமங்களுக்குச் சென்றதுடன் அங்குள்ள குழந்தைகளிடம் நேரம் செலவிட்டு மகிழ்ந்திருக்கிறார். தவிர, தன் காதல் கணவர் நிக் ஜோனஸின் பிறந்தநாளுக்கு அழகான நாய்க்குட்டி ஒன்றையும் பரிசளித்துள்ளார். இந்த இனிய தருணங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு புன்னகைக்கிறார் ப்ரியங்கா.

குங்குமம் டீம்