ஒரு பெண்ணுக்கு பாய் ஃபெஸ்டி ஆக மாறுவதற்கான 15 விதிகள்!



‘‘என்ன மச்சி... உன் சைக்கிள் பெல் அடிக்கவே மாட்டேங்குது?’’
‘‘எரும! அது பெல் இல்ல... கியரு!’’
- இது BFF (Best Friend Forever - பாய் ஃபெஸ்டி)
‘‘என்ன பேபி..! உன் சைக்கிள் பெல் அடிக்கவே மாட்டேங்குது?’’
‘‘பேபி?! சோ ஸ்வீட்… அது பெல் இல்லடா... கியர்!’’
- இது BF (BoyFriend - காதலன்)
இந்த இரண்டில் எதில் அதீத பாசம் வழிகிறது..?

பாய் ஃப்ரெண்ட் சொல்வதில் என சட்டென பதில் அளிப்பீர்கள். ஆனால், உண்மையான பாசம் பாய் ஃபெஸ்டியிடம் மட்டுமே கிடைக்கும் என்கிறார்கள் 2K கிட்ஸ்! எதையும், எப்போதும், எந்தத் தயக்கமும் இல்லாமல் பாய் ஃபெஸ்டியிடம் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், குறைந்தபட்சம் ஒரு ஜோக்கு கூட காதலனிடம் பகிர முடியாது. கொஞ்சம் குறும்பான ஜோக் என்றாலும் ‘யார் உனக்கு இதை அனுப்பினாங்க’ என்ற கேள்வி வந்துவிடும்.

தான் யார் என்பதை உணர்ந்து 100% இயல்பானவளாக ஒரு பெண் இருக்கும் ஒரே இடம், ஆண் நண்பனிடம்தான். அட்வைஸும் செய்வான், கலாய்க்கவும் செய்வான். அப்பா, அண்ணா, தம்பிகளை விட அவனிடம் மட்டுமே நம்பி ரகசியங்கள் சொல்லப்படும். ஒரு பெண்ணுக்கு காதலனாவது கூட ஈசி... ஆனால், ஆண் நண்பனாக - பாய் ஃபெஸ்டி ஆக - மாறுவதும் இருப்பதும் மலையைப் புரட்டி எடுப்பதற்கு சமம்!

வீட்டுப் பிரச்னை முதல் காதலனின் கலகம் வரை அனைத்தையும் கொட்டி பெண்கள் மூக்கு சிந்துவது பாய் ஃபெஸ்டிகளிடம்தான்.
சுருக்கமாக சொல்வதென்றால், ‘நான் ஒரு பெண்... என்னுடன் இருப்பவன் ஒரு ஆண்...’ என்னும் கட்டுகளை  அவிழ்த்து மனதில் எந்த தயக்கமோ, எதிர்பார்ப்புகளோ இல்லாமல் தோள் கொடுக்கும்  உறவாக ஒரு பெண் யாரைப் பார்க்கிறாளோ அவனே பாய் ஃபெஸ்டி.

அப்படி ஒரு பாய் ஃபெஸ்டியாக நீங்கள்  மாறினால், அப்பா, அண்ணன், தம்பி, காதலன்... என அத்தனையுமாக மாறி நின்று காக்கும்  காட் ஃபாதர்களாக உங்களை உங்கள் கேர்ள் ஃபெஸ்டிகள் பார்ப்பார்கள்.

அவள்  காதலனிடம் காசையே காட்டாத அதே பெண்கள் பாய் ஃபெஸ்டி என்றால் அவன் அவனுடைய காசை எடுக்கவே  விட மாட்டார்கள்!  
‘இந்தக் கருமமாக மாற நான் என்ன செய்யணும்..?’ என்று கேட்கும் 70, 80, 90 கிட்ஸ் ஆண்களுக்கான டிப்ஸ் இது. ஆக்சுவலி இது பாய் ஃபெஸ்டியாவதற்கான 15 விதிகள்!

 1. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மொபைல் ஆனில் இருக்க வேண்டும். அவள் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுவாள்; மெசேஜ் செய்வாள். ஆனால், இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை அவளை தொந்தரவு செய்யக் கூடாது. ஏனெனில் அந்த நேரம் அவள் காதலனுக்கான நேரம்.

2. ‘பவர் ஸ்டார் சீனிவாசன் படத்தை அதிகாலை 4 மணிக்கு FDFS பார்க்கணும்னு ஆசை...’ என்று சொன்னதுமே அதற்கு ஏற்பாடு
செய்வது முதல் ‘டேய்... சும்மா இருக்கியா ஷாப்பிங் போகணும்...’ என்றவுடன் டிரைவராக உடனே மாறுவது வரை சகலத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். அவள் எவ்வளவு திட்டினாலும் பொறுமையாக அதை வாங்கிக்கொள்ள வேண்டும்.

3. ‘அப்பாவுக்கு முடியலைடா...’ என்று சொல்லும்போதும் சரி... ‘வண்டி பன்ச்சர்டா...’ என அவள் போன் செய்யும்போதும் சரி... ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஓடோடி வந்து நிற்க வேண்டும்.  

4. ஒரு பெண் மொக்க ஜோக் அடித்தாலும் காதலன் சிரிக்க வேண்டும்... ஆனால், வாய்விட்டுச் சிரிக்கும்படி ஜோக் இருந்தாலும் ‘இதெல்லாம் ஒரு ஜோக்கு... போடி பிசாசு...’ என பாய் ஃபெஸ்டி சொல்ல வேண்டும்.  

5. ஊரே அவள் உடையைப் பாராட்டினாலும் ‘அய்யோ... பேய்...’ என பாய் ஃபெஸ்டி அலறி அவளை கோபப்படுத்த வேண்டும்!

6. கேண்டி கிரஷ் விளையாட மொபைல் கேட்பவளுக்கு PUBG விளையாடக் கற்றுக் கொடுத்து கேங் ஆக களம் இறங்க வேண்டும்.

7. ‘கரப்பான் பூச்சி...’ எனக் கத்தினால் அவள் மீதே அதை தூக்கி எறிந்து பயத்தைக் காலி செய்ய வேண்டும்.

8. ‘டேய்! அவன் செம ஹாட்டா இருக்கான்ல...’ என்றதும் பொறாமைப்படாமல் ‘அவனா... சை... இன்னும் பெட்டரா பாரு’ எனச் சொல்லத் தெரிய வேண்டும்.

9. அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பவன் காதலன். அவளுக்கு எதெல்லாம் பிடிக்காது எனத் தெரிந்து செயல்படுபவன் பாய் ஃபெஸ்டி.

10. அப்பா, அம்மாவைத் தாண்டி அவளை பெண்ணாக இல்லாமல் சக உயிரியாக நீங்கள் பார்த்தால் மட்டுமே தன் பெட்ரூம் வரை உங்களை
அனுமதிப்பாள்!

11. உங்கள் காதலை
ஜாலியாக பாம் வைத்து அவள் தகர்க்கும்போதும் சிரித்தபடியே அதை ஏற்க வேண்டும்! (வேற வழியே இல்ல பாஸ்!)

12 .அவள் அனுப்பும் ‘ஏ’ ஜோக்குக்கு சிரிக்கவேண்டுமே தவிர ‘யார் அனுப்பினான்(ள்)’ என்று கேட்கக் கூடாது.

13. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் தன் படத்தை அவள் எப்போது போட்டாலும்... ஊரே ஹார்ட்டின் சிம்பிளை பறக்கவிட்டாலும்... அழகாகவே இருந்தாலும்... பாய் ஃபெஸ்டி ஹிஹி என சிரிக்க வேண்டும்.

14. அவள் எத்தனை பாய் ஃபெஸ்டி வேண்டுமானாலும் வைத்துக்கொள்வாள். ஆனால், உங்களுக்கு அவள் மட்டுமே ஃபெஸ்டி! இதை நினைவில் வைத்துக்கொண்டு உங்கள் இருவருக்குமிடையில் வெட்டுக் குத்து வரை சென்றாலும் கடைசியில் நீங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும்.

ஷாலினி நியூட்டன்