Data Corner



*2015 - 2018 மூன்று ஆண்டுகளில் உலகம் முழுக்க 15 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு மழைக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன!

*நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 5%லிருந்து 4.5% ஆக ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

*83% இந்தியப் பெண்கள் தங்கள் கணவர் மூலமாக உடல் ரீதியான வன்முறையை அனுபவிக்கின்றனர்!

*இந்திய தாய்மார்களில் 20% பேர் மகப்பேறுக்குப் பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

*உலக தற்கொலைகளின் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு மட்டும் 36.6 %

*700 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி...’ பாடல் யூ டியூப்பில் சாதனை படைத்திருக்கிறது.

*13 - 17 வயதுடைய இந்தியர்களில் ஒரு கோடிப் பேர் ஆண்டுதோறும் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர்.

*மனநல பிரச்னை காரணமாக இந்தியா தனது உற்பத்தித் திறனில் 1.03 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

*இந்தியாவில் 4000 மனநல ஆலோசகர்களே உள்ளனர்.

தொகுப்பு: அன்னம் அரசு