COFFEE TABLE



தாபர் புரொமோ

டோலிவுட் காவ்யா தாபர், தமிழில் தடதடக்கிறார். விரைவில் விஜய் ஆண்டனியுடன் டூயட் வேறு. இன்ஸ்டாவில் முன்பெல்லாம் க்ளாமர் போட்டோஷூட்களாக தட்டிவிடும் தாபர், சமீபகாலமாக தன் பட புரொமோஷன்களை தூவிக் கொண்டிருக்கிறார். பட போஸ்டர் லுக்கிற்கு லவ் சிம்பளுடன் ‘ஆல் த பெஸ்ட்’ கமெண்ட்களும் களைகட்டுகின்றன.

திறந்தவெளி திரையரங்கம்

கோடை காலத்தில் குளிர்ப்பிரதேசங்களைத் தேடிப்போவதைப் போல ஐரோப்பியர்கள் திறந்தவெளி திரையரங்குகளைத் தேடிப் போகிறார்கள்!
அமைதியான தெரு, ஆயிரம் பேர் அமரக்கூடிய இடம், மரங்களடர்ந்த சூழல் என சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து திறந்த வெளி திரையரங்கை அமைக்கிறார்கள்.

இரவு முழுவதும் இத்திரையரங்கம் இயங்குகிறது. பொதுவான திரையரங்குகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட இங்கே குறைவு.
லண்டனிலுள்ள ரூஃப் டாப் ஃப்லிம் கிளப், சன்டோரினி தீவிலுள்ள சினி கமரி, பாரிஸிலுள்ள லா வெல்லெட்டே போன்றவை உலகப் புகழ்பெற்ற திறந்தவெளி திரையரங்குகள்.

வெங்காயத் திருட்டு

மேற்கு வங்காளத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் நடந்த விநோத சம்பவம் இது. அங்கே காய்கறி கடையை நடத்தி வருபவர் அக்‌ஷய் தாஸ். கடந்த வாரம் திங்கட்கிழமை வழக்கம் போல கடையைத் திறந்திருக்கிறார். வெங்காய வடிவில் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்; சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயத்தைக் காணவில்லை. திருடர்கள் கல்லாப்பெட்டியிலிருந்து ஒரு ரூபாயைக் கூட எடுக்கவில்லை என்பது இதில் ஹைலைட்!
இந்தச் செய்தி அச்சுக்கு சென்ற அன்று ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயைத் தாண்டியிருந்தது!

லேப்டாப் ஸ்லீவ்

இதோ வந்துவிட்டது கவர்ச்சியான லேப்டாப் ஸ்லீவ். இனி லேப்டாப் வைக்க பை வாங்கவேண்டிய அவசியமில்லை. உங்களுடைய லேப்டாப் ஸ்கிரீனின் அளவுக்கு உகந்த மாதிரி பல வகைகளில் இந்த ஸ்லீவ் கிடைக்கிறது. இதை மிகுந்த நுட்பத்துடன் வடிவமைத்திருக்கிறது ‘பெல்கின்’ நிறுவனம். லேப்டாப்பிற்கும், சார்ஜருக்கும் தனித்தனி அறைகள். கீழே விழுந்தாலும் லேப்டாப்பிற்கு எதுவும் நிகழாதபடி பாதுகாக்கிறது இந்த ஸ்லீவ். விலை ரூ.2,000.

ஐஸ் 111

மீண்டும் கோலிவுட் காற்று வீசுமென காத்திருக்கிறார் ‘தமிழ்ப்படம் 2’ ஐஸ்வர்யா மேனன். சோஷியல் மீடியாவில் மினுமினுக்கும் ஐஸ், டுவிட்டரில் மட்டும் இதுவரை 2,700 டுவிட்களைத் தட்டிவிட்டிருக்கிறார். அதில் 111 பேர்களை ஃபாலோவும் செய்கிறார். சமீபத்தில் ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி,
சட்டென திரும்பி சுழல்வதை மினி வீடியோ பதிவாக்கி ஹார்ட்டின்களை அள்ளிவிட்டார்.

குங்குமம் டீம்