லிப் லாக் பனிட்டா!



‘ஆதித்ய வர்மா’ கொடுத்த தேஜஸால் பளபளக்கிறார் லண்டன் ஸ்லிம் ஜிலேபி பனிட்டா சந்து. ரொமாண்டிக் பார்வை, லிப்லாக், பெட்ரூம் ஜிலீர் என மீராவாக அசத்திய பொண்ணு. லண்டனில் வசித்து வரும் பிரிட்டீஷ் இந்தியன் ஆக்டரான பனிட்டா, இப்போதும் அமெரிக்க டிவி ஷோக்களில் பிசியாக பரபரக்கிறார்.
‘‘‘ஆதித்ய வர்மா’லஎன் ஆக்ட்டிங் பார்த்துட்டு எல்லா திசைகள்ல இருந்தும் பாராட்டு குவியுது. ஈமெயில், இன்பாக்ஸ் முழுக்க என் பர்ஃபாமன்ஸ் பத்தி புகழ்ந்து தள்ளியிருக்காங்க. என் லண்டன் ஃப்ரெண்ட்ஸ் ஹேப்பியோ ஹேப்பி.

ஹாலிவுட் பார்த்தே வளர்ந்திருக்கேன். அமெரிக்க நடிகை மெரில் ஸ்ட்ரீப், ஏஞ்சலினா ஜோலி மாதிரி நடிகையாகணும்னு கனவு கண்டேன். அவங்கதான் என் இன்ஸ்பிரேஷன்.

பாலிவுட்ல அலியா பட், பிடிக்கும். ஸ்கூல்ல ஒரு கல்ச்சுரல் கூட மிஸ் பண்ணாம டான்ஸ், டிராமானு கலக்கியிருக்கேன். என் கேரியர் சினிமாவை நோக்கியே நகர்ந்திருக்கு. பிபிசி வழியாதான் என் கேரியர் தொடங்குச்சு. உலகம் முழுக்க சுத்தி வரும் டிராவல் ஷோவை அதுல பண்ணினேன். இதுக்காக பல நாடுகளுக்கு போயிருக்கேன்.

அப்படி இந்தியா வந்தப்பதான் ‘அக்டோபர்’ இந்திப் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் லண்டன் போயிட்டேன். தமிழ்ல நடிப்பேன்னு நினைச்சுக் கூட பார்க்கலை...’’ கண்களை விரித்தபடி சிரிக்கிறார் பனிட்டா.‘ஆதித்ய வர்மா’வில் எப்படி?இந்தப் படம் கமிட் பண்றதுக்கு முன்னாடி அதே டேட்ல அமெரிக்க டிவி சீரியல்ல நடிக்க கேட்டிருந்தாங்க. இந்த நேரத்துலதான் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசினார். கதையை கேட்டேன்.

லண்டன்ல வசிச்சாலும் எனக்கு இந்தியன் கல்ச்சர் தெரியும். மீரா கேரக்டர் எனக்குப் பிடிச்சிருந்தது. ரியல் லைஃப்ல நான் மீராவுக்கு நேரெதிர்  கேரக்டர். அதனாலயே நடிக்கணும்னு தீர்மானிச்சேன்! ரெண்டு மூணு முறை ‘அர்ஜுன் ரெட்டி’யை பார்த்தேன்.

மீரா கேரக்டர் முழுசா புரிஞ்சுது.‘ஆதித்ய வர்மா’ டைரக்டர் கிரிசாயா, ‘அர்ஜுன் ரெட்டி’ ஸ்பாட்ல இருந்தவர். அதனால அவருக்கு ஒவ்வொரு கேரக்டருக்கும் என்ன தேவை, எந்த மீட்டர்ல பர்ஃபாம் பண்ண வச்சா சரியா வரும்னு துல்லியமா தெரிஞ்சிருந்தது. ஸோ, என் வேலை ஈசியாகிடுச்சு! ஷூட்டிங் ஆரம்பிச்ச சில நாட்கள்லயே மீராவா இயல்பா நடிச்சிட்டேன்!

பாலிவுட் - கோலிவுட் என்ன வித்தியாசம்?
அப்படி கம்பேர் பண்றது சரியானதா இருக்காது. ஃபிலிம் மேக்கிங் யுனிவர்சல் எக்ஸ்பீரியன்ஸ். நடிப்பு ஒண்ணுதான். ஐ லவ் சினிமா. திறமையான டீமால் உருவாகறதுதான் சினிமா. அதுல நம் பங்களிப்பு இருப்பதை நல்ல முயற்சியா நினைப்பேன். தமிழ்ல தொடர்ந்து நடிக்கற ஐடியா இருக்கு.
துருவ் எப்படி?

ரொம்ப ரொம்ப திறமையானவர். ஹீரோவா என் வயசுக்கு ஏற்றவரே அமைஞ்சது இந்தப் படத்துலதான். விக்ரம் சார் மாதிரியே பிரமாதமான உயரங்களை தொடுவார். துருவ், கடின உழைப்பாளி. ஸ்பாட்டுல அவர் வழியா நிறைய கத்துக்கிட்டேன்!

மை.பாரதிராஜா