இந்த ஆமையின் வயது 187!



இந்த உலகில் அதிக வயதான உயிரினம் எது என்ற ஆய்வு சமீபத்தில் நடந்தது. இதில் ஜோனதன் என்ற ஆமை ‘அதிக வயதான வாழும் உயிரினம்’ என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றதுடன் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துவிட்டது.

யெஸ். இதன் வயது 187.தொலைபேசி, கேமரா, மின் விளக்குகள் உள்ளிட்ட பல விஷயங்கள் இல்லாத காலத்தில் பிறந்திருக்கிறது ஜோனதன்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு குட்டித்தீவில் பிறந்த இந்த ஆமை, ராட்சத ஆமை வகைமையைச் சார்ந்தது. பொதுவாக இந்த வகை ஆமைகள் 150 ஆண்டுகள்தான் உயிர் வாழும்.

ஆனால், ஜோனதன் அதையும் தாண்டி உயிரோடு இருக்கிறது. மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் அங்கும் இங்கும் நடந்துகொண்டு இருப்பது ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது.

இப்போது செயின்ட் ஹெலினா அரசுக்குச் சொந்தமான கவர்னர் மாளிகையைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் வசித்துவரும் ஜோனதனுடன் தினமும் ஆயிரக்கணக்கானோர் செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர்.

த.சக்திவேல்