தீபாவளி சாய்ஸ்!



கோல்டன் சேலைகள்

ஆரி, பீட்ஸ் வேலைப்பாடுகள் நிறைந்த நெட் லெஹெங்கா குறைந்த விலையான ரூ.2 ஆயிரத்தில் தொடங்குகிறது. போலவே சமீபத்திய டிரெண்ட் ஆன பெய்ஜ், இளம் பச்சை, மஞ்சள், நீலம், வெள்ளை என லைட் நிறங்களில் அதீத வேலைப்பாடுகள் நிறைந்த டிசைனர் சேலைகள், கோல்டன் சேலைகள், காஞ்சிபுரம் பட்டு... என இந்த தீபாவளிக்கு பல ஃபேஷன் மெட்டீரியல்ஸை தரமாகவும் குறைந்த விலையிலும் போத்தீஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.

பட்டு... பெஸ்ட்டு

இந்த தீபாவளியை பட்டுப் புடவைகளுடன் கொண்டாட விரும்பினால் சென்னை சில்க்ஸ் வாருங்கள். மாடர்ன் சாய்ஸாக லைட் வெயிட் புடவைகள் முதல் கிராண்ட் திருமண பட்டுகள் வரை அத்தனை புடவைகளும் சிறப்பான தறி வேலைப்பாடுகளுடன் கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவும் சல்லீசான விலையில் அசத்தலான தரத்துடன்.

வர்ணஜாலம்

ஆரெம்கேவியின் கைதேர்ந்த நெசவு கலைஞர்களின் படைப்பான போன்சாய் பச்சை நிற பட்டு, விழாகாலத்துக்கு ஏற்ற அழகிய பட்டுப்புடவை என்றால் இவர்களது டிசைன் ஸ்டூடியோவின் காப்புரிமை பெற்ற வர்ணஜால தொழில்நுட்பத்தில், ஒளியியல் அடிப்படையிலான வண்ணச் சேர்க்கையில், தூய பட்டில் காலத்திற்கேற்ற டிசைன்களில் உருவாக்கப்பட்ட வர்ணஜால பட்டு, தனி ஸ்பெஷல். வாங்கக் கூடிய விலையும் நினைத்துப் பார்க்க முடியாத தரமும் இவர்களின் அடையாளம்.

கலெக்‌ஷன் ராஜா

இந்திய சுதந்திரத்திற்கு முன் நிறுவப்பட்ட பிரபலமான மற்றும் பாரம்பரியமான கார்மென்ட் சப்ளையர் என சாமுண்டி சில்க்ஸ் மில்லை குறிப்பிடலாம். காட்டன், பட்டு, உள்ளிட்ட மெட்டீரியல்களுடன் ஜக்கார்ட், டஃப்ஃபெட்டாஸ், தூபியான், ஷியர்ஸ், தாமாஸ்க், புரோகேட்ஸ் உள்ளிட்ட அயல்நாட்டு மெட்டீரியல்களையும் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யும் இவர்கள் தரத்துக்கும் குறைவான விலைக்கும் பெயர் போனவர்கள். இந்த ஆண்டும் இவர்களது கலெக்‌ஷன்ஸ் அள்ளுகிறது.

சிவா, ஆர்.சி.எஸ்.