COFFEE TABLE



ஃபீலிங் பேர்ட்

இந்தி வெப்சீரீஸான ‘லஸ்ட் ஸ்டோரீஸை’ தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். அதில் மெயின் கேரக்டரில் அமலாபால் கமிட் ஆகியிருக்கிறார்.
சோஷியல் மீடியா பக்கங்களில் அதைப் பற்றி  பேசாமலிருக்கும் அமலாபால், தன் செல்லப் பூனை ப்ளூவின் சேட்டைகளில் லயித்து... ஃபீலிங் பேர்ட் ஆகிவிட்டார்.

தலையணையில் முகம் பதித்து, குட்டித்தூக்கம் போடும் ப்ளூவைப் பார்த்து, ‘‘Catnapping is not just a theory, it’s one of the most sophisticated way of chilling!’’ என்ற ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் தட்டிவிட்டு, லைக்ஸை குவித்து வருகிறார்.

பெஸ்ட் டிசைன் போன்சமீபத்தில் ‘ரெனோ 2’ என்ற மாடலை களமிறக்கியிருக்கிறது ‘ஓப்போ’. இந்த வருடத்தின் பெஸ்ட் டிசைன் போன் இதுதான் என்று வாடிக்கையாளர்களும், கேட்ஜெட்ஸ் விமர்சகர்களும் கொண்டாடுகின்றனர். 6.55 இன்ச்சில் டிஸ்பிளே, 8 ஜிபி ரேம், 4000mAh பேட்டரி திறன், 48 எம்பி, 13 எம்பி, 8 எம்பி, 2 எம்பி என வரிசையாக நான்கு பின்புற கேமராக்கள், தவிர, செல்ஃபி க்ளிக் செய்ய 16 எம்பியில் ஒரு கேமரா என அசத்துகிறது இந்த போன். விலை ரூ. 36,990.

உலகளவில் பொருளாதார வீழ்ச்சி‘‘இந்தியா மட்டுமல்ல, உலகத்தின் 90 சதவீத நாடுகள் பொருளாதார மந்தத்தில் இருக்கின்றன...’’ என்கிறது சர்வதேச பண நிதியத்தின் (ஐஎம்எஃப்) ஆய்வு.‘‘இதில் இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. தவிர, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளிலேயே வேலையில்லாமை தலைவிரித்தாடுகிறது...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது அந்த ஆய்வு.உலகப் பொருளாதாரத்தின் இப்போதைய ஹீரோவான சீனாவில் கூட பொருளாதார வளர்ச்சி கொஞ்சம் சுணங்கித்தான் போயிருக்கிறது என்பது இதில் ஹைலைட்.

டாப்ஸி பாட்டி

பாலிவுட்டில் டாப்ஸியின் கொடிதான் டாப்பில் பறக்கிறது. இப்போது அனுராக் காஷ்யப் தயாரித்து வரும் ‘சாண்ட் கி ஆன்க்’ என்ற பயோகிராபி படத்தில், துப்பாக்கி சுடுதலில் பதக்கங்கள் குவித்த ரிவால்வர் பாட்டியான பிரகாஸி டொமரின் ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் பிரகாஸி டொமரை சந்தித்து மகிழ்ந்தார். அந்த இனிய மொமன்ட்டை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் டாப்ஸி.

நேர்மையான குடும்பம்

தெற்கு கரோலினாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வீட்டுக்கு அருகிலுள்ள கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். மீனுக்குப் பதிலாக பெரிய பை ஒன்று தூண்டிலில் மாட்டியது. வீட்டுக்கு வந்து பிரித்துப்பார்த்தால் அதில் கோகைன் போதைப் பொருள்!நேர்மையான அந்த குடும்பத்தினர் காவல்நிலையத்தில் கோகைனை ஒப்படைத்துவிட்டனர். அதன் மதிப்பு 20 கோடி ரூபாய். இந்தச் சம்பவம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது.

குங்குமம் டீம்