பிகிலு... விசிலு!



சீக்ரெட்ஸ் உடைக்கும் அர்ச்சனா கல்பாத்தி

விஜய்யின் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி ‘பிகில்’ தீபாவளி! பாசபட்டாசு அப்பா - பாய்ச்சல் பட்டாசு மகன் என ரெட்டை சரவெடியாக விஜய் வெடித்திருப்பதால் எல்லா ஏரியாக்களிலும் விசில் ஹைடெசிபலில் ஒலிக்கிறது! அந்த துள்ளல் மத்தாப்பு படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசரான அர்ச்சனா கல்பாத்தியிடமும் கலர்ஃபுல்லாக அள்ளுகிறது.

‘‘காலேஜ் படிக்கறப்பல இருந்து விஜய் சாரோட தீவிர ஃபேன். காலேஜை கட் அடிச்சிட்டு அவர் படத்துக்கு போயிருக்கேன். எங்க அப்பா சினிமா புரொடக்‌ஷன்ல இறங்கினதும் விஜய் சார் படத்தை தயாரிப்பது என் கனவா மலர்ந்தது. இப்ப அது பூத்திருக்கு! அதுவும் விஜய் சார் படங்கள்லயே ஹை பட்ஜெட்டா உருவாகி இருக்கு ‘பிகில்’.

நயன்தாரா, ஜாக்கிஷெராஃப், ரஹ்மான் சார் மியூசிக்னு மல்டி பெரிய ஸ்டார் காஸ்ட், டெக்னீஷியன்ஸ் அமைஞ்சது பெரிய பலம். படம் ஃபெஸ்டிவல் ட்ரீட்டா வந்திருக்கு. பொதுவா மூவி புரொடக்‌ஷன்ஸ் வேலையை அப்பாதான் பார்த்துப்பார். விஜய் சார்தான் ‘ரொம்ப பெரிய பட்ஜெட்டா இருக்கு. ஸோ, அர்ச்சனா கிரியேட்டிவ் புரொட்யூசரா இருக்கட்டும்’னு சொன்னார். அதுக்கு அப்பாவும் க்ரீன் சிக்னல் கொடுத்தார்...’’ ஆனந்தமாகிறார் அர்ச்சனா கல்பாத்தி. ஏஜிஎஸ் சினிமாஸின் சிஇஓவாகவும் சிறகு விரிப்பவர்.

முதன்முறையா கிரியேட்டிவ் புரொட்யூசர்...யெஸ். ஆனா, எனக்கு சம்பளம் கிடையாது. இந்த ப்ராஜெக்ட் யதேச்சையா அமைஞ்சது. ஏஜிஎஸ்ல நிறைய படங்கள் தயாரிச்சிருக்கோம். நான் புரொடக்‌ஷன்ல இன்வால்வ் ஆனது கிடையாது. ஆனா, நிறைய கதைகள் கேட்டிருக்கேன். பொதுவா, ஒரு கதையை அப்பாவும் என் ரெண்டு சித்தப்பாக்களும் சேர்ந்துதான் கேட்பாங்க. நான் ஃப்ரீயா இருந்தா என்னையும் கூப்பிட்டு கதையை கேட்க வைப்பாங்க. நிறைய பேரோட இன்புட்ஸ் இருக்கணும்னு அப்பா விரும்புவார்.

ஒரு கதை அவங்க மூணு பேரையும் திருப்தி பண்ணினாதான் ஓகே செய்வாங்க. இப்படி முடிவான பிறகுதான் அந்தக் கதைக்கு யார் சரியான சாய்ஸா இருப்பாங்கனு பார்த்து ஆர்ட்டிஸ்ட்ஸ்ல இருந்து டெக்னீஷியன்ஸ் வரை அப்பா செலக்ட் பண்ணுவார்.ஆனா, ‘பிகில்’ ஸ்பெஷல். விஜய் சார் டேட்ஸ் கிடைச்சதால டேக் ஆஃப் ஆச்சு. அப்பா ரொம்ப ரொம்ப டஃப். மத்தவங்ககிட்ட ஸ்வீட்டா பழகுவார்.

ஆனா, என்கிட்ட கண்டிப்பான அப்பாவாதான் இருப்பார். அவர்கிட்ட பாராட்டு வாங்கறதே கஷ்டம். நான் அட்லீ கூட சண்டை போட்டா கூட அப்பா, அட்லீ பக்கம்தான் நிற்பார்!இதுவரை நாங்க யார்கிட்டேயும் ஃபைனான்ஸ் வாங்கினதில்ல. அதனாலயே ரிலீஸ் பிரச்னைகள் வராம பார்த்துக்க முடியுது. கரெக்ட்டான டைம்லயும் எங்களால படத்தை ரிலீஸ் பண்ணமுடியுது.

எங்க அப்பாவும் விஜய் சாரும் அடிக்கடி பேசிப்பாங்க. அப்படியிருந்தும் சாரோட படத்தை தயாரிக்கும் வாய்ப்பு இப்பதான் அமைஞ்சது.
‘பிகில்’ பக்கா ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் மூவி. ரூ.180 கோடில பிரமாண்டமா தயாரிச்சிருக்கோம். ஃபேமிலி ஆடியன்ஸையும் யங்ஸ்டர்ஸ்ஸையும் ஒருசேர இந்தப் படம் ஈர்க்கும். அட்லீ அப்படியொரு சரவெடியை உருவாக்கி இருக்கார்!  

டபுள் விஜய் தவிர படத்துல வேற என்ன ஸ்பெஷல்?
இப்பவே சொன்னா சஸ்பென்ஸ் போயிடும்! நல்ல ட்ரீட் காத்திருக்கு. படத்தோட டீசர்ல கூட கதையை ரிவீல் பண்ணல. ஒவ்வொரு ஃப்ரேமிலும் விஜய் சாருக்கு விசில் பறக்கும். அது நிச்சயம். நம்ம லைஃப்பிலும் இப்படி நிறைய நடந்திருக்கேனு எல்லாராலும் கனெக்ட் ஆக முடியும்.
நம்மூர் டெக்னீஷியன்ஸ் தவிர வெளிநாட்டு தொழில்நுட்பக் கலைஞர்கள் நிறைய பேர் ஒர்க் பண்ணியிருக்காங்க.

அவங்கள்ல பலரும் பெண்கள்!

மலேஷியாவில் சில போர்ஷன்ஸ் ஷூட் பண்ணியிருக்கோம். இந்த கதைக்கு ஃபுட்பால் தெரிஞ்ச கோரியோகிராஃபர்ஸ் தேவைப்பட்டாங்க. ஏமி மெக்டேனியல், ஜஸ்டின் ஸ்கின்னர்னு இரண்டு பேர் இதுல மிரட்டியிருக்காங்க. ஃபாரின்ல இருந்து கேமரா எக்யூப்மென்ட்ஸ் நிறைய இறக்குமதி பண்ணினோம்.

க்ளைமாக்ஸை மிகப்பெரிய ஃபுட்பால் மைதானத்துல ஷூட் பண்ண வேண்டியிருந்தது. அதுக்காக இந்தியா முழுக்க உள்ள பிரமாண்ட மைதானங்களுக்கு லொகேஷன் பார்க்க போயிருந்தோம். எங்கயுமே ஷூட் பண்ண அனுமதியில்ல. ஸோ, மைதானத்தை செட் போட்டு எடுத்திருக்கோம்!

படத்துல ஆறு நிஜ ஃபுட்பால் பிளேயர்ஸும், 6 ஆர்ட்டிஸ்ட்ஸும் நடிச்சிருக்காங்க. கடைசி நாள் ஷூட்ல அந்த பிளேயர்ஸா நடிச்ச நடிகர்கள் விளையாட்டை கத்துக்கிட்டாங்க. நிஜ பிளேயர்ஸ் ஆக்ட்டிங்கை கத்துக்கிட்டதா சொன்னாங்க!

ஒவ்வொரு ஃப்ரேமிலும் அட்லீ சாரின் உழைப்பு தெரியும். முதல்முறையா நாங்க ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட ஒர்க் பண்ணியிருக்கோம். நயன்தாரா மேமோட நாங்க ரெண்டாவது முறையா ஒர்க் பண்ணியிருக்கோம். சினிமாவை ரொம்பவும் நேசிக்கற பொண்ணு. டெடிகேட்டட் ஆர்ட்டிஸ்ட்.
படத்துல கதிர், யோகிபாபு, விவேக் சார், ஆனந்த்ராஜ் சார், தேவதர்ஷினி, கு.ஞானசம்பந்தம், ரெஃபாமோனிகா, வர்ஷா, இந்துஷா, அமிர்தா, காயத்ரி, மனோபாலா, சௌந்தர்ராஜா, டேனியல்பாலாஜினு நிறைய நட்சத்திரங்கள். மூணு வில்லன்கள் படத்துல இருக்காங்க. அதில் ஜாக்கி ஷெராஃப்பும் ஒருத்தர்!

எப்படி போகுது உங்க சிஇஓ ஒர்க்ஸ்..?
சூப்பரா! தியேட்டர் சிஇஓவாக இருக்கறதால இண்டஸ்ட்ரீயோட உண்மையான நிலவரம் தெரியும். யாருக்கு எவ்ளோ பிசினஸ் ஆகுது... யாருக்கு நிஜமாகவே மார்க்கெட் இருக்கு.... இப்படி. தியேட்டர் கலெக்‌ஷன் பர்சன்ட்டேஜ் கணக்குல இருக்கறதால என்னோட தியேட்டர் வசூலை வச்சு தமிழ்நாட்டுல எவ்ளோ கலெக்‌ஷன் ஆகுதுனு தெரிஞ்சுக்குவேன்.

எல்லா மொழிப்படங்களும் நாங்க திரையிடுறதால, அங்குள்ள டெக்னீஷியன்ஸ், நடிகர்கள் பத்தி தெரிஞ்சுக்கறேன். நிறைய இடங்கள்ல எங்க தியேட்டர் இருந்தாலும், நான் வில்லிவாக்கம் தியேட்டர்லதான் படம் பார்க்கறேன்.  ஏன்னா, அங்கதான் ஆல் சென்டர் ஆடியன்ஸும் வருவாங்க. பல்ஸ் புரியும்.
என்ன சொல்றார் விஜய்?

‘பிகில்’ நல்லா வந்ததுல அவர் செம ஹேப்பி. கடைசிநாள் ஷூட் அன்னிக்கு எல்லாருக்கும் கோல்ட் காயின் கொடுத்து சந்தோஷப்படுத்தினார். டாப் ஹீரோவை வைச்சு படம் பண்றப்ப வர்ற எந்த டென்ஷனையும் நாங்க அனுபவிக்கலை! அந்தளவுக்கு எல்லாரையும் ஃப்ரெண்ட்லியா ஃபீல் பண்ண வச்சுட்டார்.

125 கோடி ரூபாதான் ஆரம்ப பட்ஜெட். ஆனா, பெரிய படமா மாறிடுச்சு. எக்ஸ்ட்ரா ஷூட் தேவைப்பட்டுச்சு. விஜய் சார்கிட்ட 40 நாட்கள் கூடுதலா டேட்ஸ் கேட்டோம். மறுப்பே சொல்லாம கொடுத்துட்டார். இப்படி எல்லா விதத்துலயும் புரொட்யூசருக்கும் டைரக்டருக்கும் அவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருந்தார்.

படம் முடிஞ்சதும் ஃபுட்பால்ல அவர்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கினேன்! தொடர்ந்து விஜய் சார் படங்கள் பண்ண விரும்புறோம்.
இந்த தீபாவளியும் சர்வ நிச்சயமா விஜய் சார் தீபாவளிதான்!

மை.பாரதிராஜா