ஜெயம் ரவி ப்ளே ஸ்டோர்



* மை.பா

கையிலிருப்பது: ஐபோன்.

நடிக்க வந்ததிலிருந்து கடைப்பிடிப்பது...: அடிக்கடி மொபைல் எண்ணை மாற்றுவது!

மறக்க முடியாத ஹேப்பி: கல்லூரியில் படிக்கும் போது என்சிசியில் ‘பெஸ்ட் டிசிப்ளின் கேடட்’ அவார்டு வாங்கியது.

பிடித்த உணவு: அம்மாவின் சமையல், பிரியாணி, ஜப்பான் உணவு.

பிடிக்காதது: கையில் வாட்ச் கட்டுவது.

பயணத்திற்கு: ரெட் கலர் ஸ்விஃப்ட், வொயிட் கலர் ஆடி.

பயப்படுவது: கரப்பானுக்கு.

அடிக்கடி சொல்லும் தத்துவம்: சந்தோஷத்தை பணத்தால வாங்க முடியாது.

ஃபேவரிட் ஸ்பாட்: மாலத்தீவு.

பிரபலங்களில் க்ரஷ்: சிம்ரன்

மனதை உறுத்திய கிசுகிசு: ‘‘யாரோ ஒரு நடிகரை நான் தப்பா பேசிட்டேன்னு நியூஸ் படிச்சேன். அப்படி யாரையும் நான் சொன்னதில்ல.  எல்லாரையுமே என்கரேஜ் பண்ணித்தான் பேசியிருக்கேன்...’’

பெஸ்ட் ஃப்ரெண்ட்: மகன் ஆரவ்.

ராசி: கன்னி.

மகிழும் ஒரு விஷயம்: முதன்முறையாக அப்பா - அம்மாவை அழைத்துக் கொண்டு ஐரோப்பா டூர் பறந்து வந்தது.