ஜிம்முக்கு போறீங்களா..? எச்சரிக்கை!ஆமாம். ‘ஜிம்முக்குப் போனால் ஆரோக்கியம் குறையலாம்...’ என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு.‘‘உடல் எடையைக் குறைப்பதற்காக நாம் எத்தனையோ பயிற்சிகளைச் செய்கிறோம். இதில் உடல் எடை குறையலாம். ஆனால், ஆரோக்கியத்தை எப்படி கணக்கிடுவது..?’’ என்று கேள்வி எழுப்புகிறது அந்த ஆய்வு.

‘‘உடற்பயிற்சிகளின் மூலம் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு அழிந்து உடல் எடை குறைந்ததா அல்லது நல்ல கொழுப்பான புரதச்சத்து அழிந்து உடல் எடை குறைந்ததா? என கணக்கிட்டால் பெரும்பாலானவர்களுக்கு பாசிட்டிவ்வாகவே பதில் வரும்.

அதனால் தினசரி புரதச்சத்து உள்ள உணவை அதிகமாக எடுத்துக்கொண்டு மிதமான பயிற்சிகளைச் செய்தாலே உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்...’’ என்கிறார்கள் நிபுணர்கள்!