பூரிப்பு



ரீடர்ஸ் வாய்ஸ்

‘கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்’ - தொடரில் அத்திவரதர் காட்சி தரும் வைபவம் நிகழ்ந்த காஞ்சி வரதராஜப்பெருமாள் ஆலயம் பற்றிய கட்டுரை வெளியிட்டது வெகு அற்புதமான பொருத்தம்.
- த.சத்தியநாராயண், அயன்புரம்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; பிரேமா குரு, சென்னை; செம்மொழி, சேலையூர்; சாய்கவின், பொள்ளாச்சி; சங்கீத சரவணன், மயிலாடுதுறை; சந்திரமதி, சென்னை; சுதாகர், மடிப்பாக்கம்; ஆர்.ஜெ.சி, சென்னை.

ஜெ. அறிமுகப்படுத்திய மினி பஸ் ஆரம்பத்தில் மெனி பஸ்களாக ஓடியது. தற்போது மினி சர்வீஸ் பஸ்களாகக் குறைந்து பல்லிளித்துக் கொண்டிருக்கிற அவற்றைப் படம் பிடித்துக் காட்டிய கட்டுரை அருமை.
- தா.சைமன் தேவா, விநாயகபுரம்; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; இலக்சித், மடிப்பாக்கம்; கதிரவன், மதுரை; செந்தில், கோவை; பி.சாந்தா, மதுரை; மனோகர், மேட்டுப்பாளையம்.

2624 வயதான சைப்ரஸ் மரத்தைப் பற்றிய தகவல் பிரமிக்க வைத்தது. மரத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.
- ரவிக்குமார், பொள்ளாச்சி; முரளி, நங்கநல்லூர்; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; கைவல்லியம், மானகிரி;  நிலவழகு, நீலாங்கரை.

அண்டை நாடுகளின் ஆதரவு இருந்தால் தான் ‘அகதிகள்’ என்கிற வார்த்தையே அகராதியில் இருக்கும் என்பது, மரணத்தில் முடிகிற அவர்களின் கனவுகளில் கண்டுகொள்ளப்பட்ட உண்மை.
-சந்தியா திலீப், கே.கே.நகர்; மியாவ்சின், கே.கே.நகர்; இலக்சித், மடிப்பாக்கம்; சந்திரமதி, சென்னை; ஜெர்லின், ஆலந்தூர்; கலிவரதன், கீழ்க்கட்டளை.

திரைப்படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் இருந்தால் தான் அவை ‘சென்ட்’ போட்ட உடம்பு போல ரசிகர்களால் மொய்க்கப்படும் என்று கட்டுரை சொல்வது உண்மை.
-பப்பு, அசோக் நகர்; சரண் சுதாகர், வேளச்சேரி; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; ஜெயச்சந்திர பாபு, மடிப்பாக்கம்; ஆத்மநாதன், ஆற்காடு.

குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடாத பாடல்களைத் தருவதாகச் சொல்கிற ‘தெருக்குரல்’ கலைஞர்கள் கொஞ்ச நாளிலேயே பேசப்
படுவார்கள்.
- மியாவ்சின், கே.கே. நகர்; அ.யாழினி பர்வதம், சென்னை; அழகப்பன், மதுரை; மனோகர், மேட்டுப்பாளையம்; கதிர், சென்னை; பழனிச்சாமி, சேலம்; பிரபாகரன், கோடம்பாக்கம்.

ஆடையில்லாமல் நடித்தாரா அமலா பால் என்று ஆவலைத் தூண்டும் கேள்வியுடன் எழுதப்பட்ட அலசல் கட்டுரை ஆச்சர்யம்.
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; க.நஞ்சையன், பொள்ளாச்சி; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; ப.மூர்த்தி, பெங்களூரு.

மைக்ரோ பிளாஸ்டிக்ஸ், நானோ பிளாஸ்டிக்ஸ் உருவாகும் விதம், அதனால் ஏற்படும் விபரீதங்கள் உடலை நடுங்க வைத்தது.
-ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; க.நஞ்சையன், பொள்ளாச்சி.

அமெரிக்காவின் மொரீன் பெக் ஒரேயொரு கையோடு பாறை ஏறும் சாதனை படைத்து பட்டங்கள் பெற்று, ரோல் மாடலாக இருப்பது பிரமாண்ட ஆச்சர்யம். மனதுக்கு நிறைவான பூரிப்பு.
-மயிலை.கோபி, அசோக் நகர்.