COFFEE TABLEஹாலிவுட் டூ கோலிவுட் சேலஞ்ச்!

சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் கராத்தே ஸ்டைலில் தன் காலைத் தூக்கி, பாட்டில் ஒன்றின் மூடியைத் திறந்து காட்டி, ‘இதைப் போல யாராவது செய்ய முடியுமா?’ என சவால் விட்டார்.

உடனே சவாலை ஏற்றுக்கொண்ட பாலிவுட் ஸ்டார் அக்‌ஷய்குமார், ஜேசனை விட சூப்பராக பாட்டில் மூடியை ஓப்பன் செய்து அசத்தினார்!இப்போது அந்த சேலஞ்ச் கோலிவுட்டிலும் பற்றிக்கொண்டுவிட்டது. ஆக்‌ஷன்கிங் அர்ஜுன், யாஷிகா ஆனந்த் என பலரும் தங்களின் இன்ஸ்டா பக்கங்களில் பாட்டில் கேப் சேலஞ்சை பதிவிட்டு லைக்குகளை அள்ளுகின்றனர்.

ஆயுசு கெட்டி!

‘‘சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியர்களின் வாழ்நாள் காலம் சராசரியாக 32 வருடங்கள் அதிகரித்திருக்கிறது...’’ என்று ஆச்சர்யமளிக்கிறது சமீபத்திய ஆய்வு.
1940களில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 37 வருடங்களாக இருந்தது. இப்போது 69 வருடங்கள்!‘‘மருத்துவ வசதி, சுகாதாரம், வீட்டு வசதிகள் போன்றவைதான் வாழ்நாள் அதிகரிக்க முக்கிய காரணங்கள்...’’ என்கிறது அந்த ஆய்வு.கடந்த ஐம்பது வருடங்களில் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் மனிதனின் சராசரி ஆயுட்காலம் கணிசமான அளவில் உயர்ந்திருக்கிறது!

உயிர் காக்கும் காவல்துறை!

கடந்த வாரம் மும்பை மாநகரை வெள்ளப்பெருக்கு அடித்து நொறுக்கியது. 35க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு மற்றும் ஏராளமான பொருட்சேதங்களுக்கு நடுவில் சில நெகிழ்வான சம்பவங்களும் அரங்கேறின. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நாய் ஒன்று ஒரு குழியில் மூழ்கி உயிருக்குப் போராடியது.

அது காவல்துறை அதிகாரி பிரகாஷ் பவார் கண்ணில் பட, உடனே அவர் தண்ணீரில் இறங்கி நாயைக் காப்பாற்றிவிட்டார். அலியா பட் உட்பட பாலிவுட் நட்சத்திரங்கள் எல்லோரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

வந்தாச்சு கேம்ஸ் பிரியர்களுக்கான போன்!

‘விவோ’ நிறுவனம் ‘Z1 ப்ரோ’ என்ற புதிய மாடலை களமிறக்கியுள்ளது. ஃபுல் ஹெச்.டியுடன் 6.53 இன்ச்சில் மெகா சைஸ் டிஸ்பிளே, 32 எம்பியில் செல்ஃபி கேமரா, 16 எம்பி, 8 எம்பி, 2 எம்பி என வரிசையாக மூன்று பின்புற கேமராக்கள், 5000mAh பேட்டரி திறன், 6ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் என கேம்ஸ் விரும்பிகளுக்காக ஸ்பெஷலாக இதை வடிவமைத்திருக்கிறார்கள். விலை ரூ.14,990ல் ஆரம்பிக்கிறது.

கிஃப்ட் ஸ்பெஷல்!

உங்கள் மனம் கவர்ந்தவர்களின் பர்த்டே மற்றும் ஸ்பெஷல் தினங்களுக்கு கிரியேட்டிவ்வாக கிஃப்ட்கள் செய்து கொடுக்க நினைப்பவரா நீங்கள்?
அப்படியெனில் நீங்கள் அவசியம்  பார்க்க வேண்டிய காணொளி இது.

ஃபேஸ்புக்கில் உள்ள ‘5-minute crafts’ பக்கத்தில் ‘creative gift ideas’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவை 10 மில்லியன் பேர் பார்த்து ரசித்து வைரலாக்கி வருகின்றனர்.

குங்குமம் டீம்