உலகின் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்!அறுபத்தி மூன்று ஏக்கர் பரப்பளவில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கைகளுடன் அகமதாபாத்தில் பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்.

குஜராத் கிரிக்கெட் சங்கம் சார்பில் உருவாகும் இந்த ஸ்டேடியத்துக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த வருடம் ஜனவரியில் நடந்தது.நான்கு டிரெஸ்ஸிங் ரூம்கள், ஒரு கிளப் ஹவுஸ், ஐம்பதுக்கும் மேற்பட்ட தனித்தனி சொகுசு அறைகள், நீச்சல் குளம், 70 கார்ப்பரேட் பாக்ஸ்கள் என நவீன வசதிகளுடன் ஜொலிக்கப் போகும் இந்த ஸ்டேடியத்துக்கான கட்டுமானச் செலவு மட்டுமே 700 கோடி ரூபாய்!

இங்கு 3,000 கார்களையும் 10,000 டூ வீலர்களையும் பார்க் செய்யும் முடியும். ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய மெல்போர்ன் ஸ்டேடியத்தை மாதிரியாக வைத்து இதை உருவாக்கி வருகிறார்கள்!     

த.சக்திவேல்