பயனுள்ள மருத்துவ கண்காட்சி!பொதுமக்களுக்கும், மருத்துவர்களுக்கும் பயன் தரும் வகையில் மருத்துவ கண்காட்சி ஒன்றை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது சன் குழுமம். தினகரன் ஹெல்த் அண்ட் ஃபிட்னஸ் எக்ஸ்போ 2019 என்ற பெயரில் நடந்த இந்த பிரமாண்ட எக்ஸ்போ சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
கடந்த ஜூன் மாதம் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஹெல்த் எக்ஸ்போவை தினகரன் நாளிதழின் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர். ரமேஷ் அவர்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

ஜெம் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் எம்.எஸ்.அசோகன், நியூட்ரா பாக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி நிகார் தேசாய், சித்த மருத்துவர் யோக வித்யா மற்றும் ‘உலக ஆணழகன்’ பட்டம் வென்ற அரசு ஆகியோர் குத்து விளக்கேற்றி சிறப்பித்தனர்.

மருத்துவக் கண்காட்சியை தினகரன் நாளிதழுடன் மியாட் இன்டர்நேஷனல், ஜெம் மருத்துவமனை, ஹெல்த் மற்றும் சப்ளிமென்ட் தயாரிப்பு நிறுவனமான நியூட்ரா பாக்ஸ்(நியூட்ரிஷன் பார்ட்னர்), இயற்கை முறையில் கருத்தரிப்பு அடையச் செய்வதில் முன்னணி நிறுவனமாக அறியப்பெறும் எத்னிக் ஹெல்த் கேர் ஆகியவை கை கோர்த்துக் கொண்டன.

இதுபோன்ற ஹெல்த் அண்ட் ஃபிட்னஸ் எக்ஸ்போவை இதற்கு முன் தாங்கள் பார்த்தது இல்ைல என்றும், இந்த எக்ஸ்போ மிகமிக பயனுள்ளதாக இருந்ததாகவும் பார்வையாளர்கள் குறிப்பிட்டனர்.