NEW ADMISSIONS!ஜூன் வந்தாச்சு... பள்ளிகளில் மட்டும்தான் புது ஸ்டூடண்ட்ஸ் சேருவார்களா என்ன?! சினிமாவிலும் நியூ அட்மிஷன்ஸ் உண்டுதானே!அந்த வகையில் சாண்டல்வுட் எனப்படும் கன்னடத்திலும், டோலிவுட் எனப்படும் தெலுங்கிலும் பூத்திருக்கும் ஃப்ரெஷ் ஃப்ளவர்ஸ் இவர்கள்தான்!

அதிதி ஆர்யா

மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் தில்லி கில்லி. கன்னட ‘குருேக்ஷத்ரா’வில் ஸ்கோர் செய்திருக்கும் இவர், ‘ஃபெமினா மிஸ் இண்டியா 2015’ பட்டம் வென்றவர்!‘‘பூர்வீகம் தில்லி. பிசினஸ் ஸ்டடீஸ் முடிச்சிருக்கேன். தன்னார்வ சேவை அமைப்புகள்ல ஒர்க் பண்றப்ப வீதி நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். தெலுங்குல பூரி ஜெகந்நாத் இயக்கிய ‘இசம்’ படத்துல நடிச்சுட்டு கன்னட ‘குருேக்ஷத்ரா’ல நடிச்சேன்...’’ புன்னகைக்கும் அதிதி, இந்தி வெப் சீரீஸிலும் பிசி!

தன்யா ஹோப்

‘தடம்’ மூலம் தமிழிலும் ஹார்ட்டீன் லைக்ஸ் தெறிக்க விட்டிருக்கும் இவர், பெங்களூரு பேல்பூரி. கன்னடத்தில் ‘யஜமானா’, ‘உத்ஹர்ஷா’ (தமிழில் ‘உச்சக்கட்டம்’), ‘அமர்’ என அடுத்தடுத்து தடதடத்த மாடலிங் மைனா. ‘

‘பெங்களூரூலதான் ஸ்கூல் படிப்பு முடிச்சேன். அப்புறம் லண்டன் ட்ராவல். இண்டர்நேஷனல் ரிலேஷன்ஷிப்ல டிகிரி முடிச்சுட்டு மும்பை வந்தேன். தெலுங்கில் ‘அபாடலு ஒக்கன்டேவாடு’, ‘நேனு சைலஜா’ படங்கள் கிடைச்சது. கன்னடத்துல தர்ஷனோடு நடிச்ச ‘யஜமானா’ நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கு!’’ என்கிறார் தன்யா ஹோப்.

பாயல் ராஜ்புத்

காதலை அள்ளித் தெளித்த ‘ஆர்.எக்ஸ். 100’ன் க்ளாமர் ஆர்டிஎக்ஸ்தான் இந்த பஞ்சாபி கோதுமை அல்வா. பஞ்சாபி டிவி சீரியலில் மின்னிக் கொண்டிருந்தவரை பாலிவுட் கவ்விக் கொண்டு வந்தாலும், டோலிவுட்டில்தான் பதினாறடி பாய்கிறார். இப்போது ‘வெங்கி மாமா’, ‘மன்மதடு 2’ என விதவிதமான ஜானர்களில் வெளுத்து வாங்குகிறார். உதயநிதி நடிக்கும் ‘ஏஞ்சல்’ வழியே தமிழிலும் வலது காலை எடுத்து வைத்திருக்கிறார்!

ஆகாங்க்‌ஷா சிங்

கன்னட ஹீரோ கிச்சா சுதிப்பின் ‘பயில்வான்’ ஹீரோயின். பாலிவுட்டின் சின்னத்திரை கொடுத்த மினுமினுப்பில் பெரிய திரை பக்கம் வந்த ராஜஸ்தான் ரசகுல்லா. இவரது டிவி ஷோஸில் ஒன்று லண்டனில் செம ஹிட். ஆக, கடல் தாண்டியும் ஆகாங்க்‌ஷா சிங்குக்கு ரசிகர்கள் உண்டு!அந்த ஒரே சீரீஸில் பாலிவுட் கதவைத் திறந்தது. வருண் தவானின் ‘பத்ரிநாத் கி துல்ஹனியா’வில் அறிமுகமானார். அங்கிருந்து தெலுங்கு. இப்பொழுது கன்னடம்.

பேஸிக்கலி பொண்ணு பிசியோதெரபிஸ்ட். ஆனால், டிவி சீரியல்ஸ், ஒரு டஜன் தியேட்டர் ப்ளே... என கெத்து காட்டுகிறார்.முக்கியமான விஷயம், இவருக்கு திருமணமாகி விட்டதாக மீடியாக்கள் கிசுகிசுக்கின்றன!

கல்யாணி பிரியதர்ஷன்

அமலா - நாகார்ஜுனாவின் மகன் அகில் நடித்த ‘ஹலோ’ தெலுங்குப் படம் மூலம் அறிமுகமான இவர், நடிகை லிசி - இயக்குநர் பிரியதர்ஷனின் செல்ல மகள். சென்னையிலும், வெளிநாடுகளிலும் படித்திருக்கும் ஆர்க்கிடெக்ட். தியேட்டர் ஒர்க்‌ஷாப்புகளில் கவனம் செலுத்துபவர்.

ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலின் உதவியாளராக பாலிவுட், கோலிவுட் படங்களில் ஆர்ட் டிபார்ட்மெண்ட்டில் பணியாற்றி இருக்கிறார்.நடிக்க வந்தது ஆக்சிடெண்ட். அப்பா பிரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்த விக்ரம் குமாரே ‘ஹலோ’வை இயக்கியவர் என்பதால் கல்யாணி ஹேப்பி!

ரஷ்மிகா மந்தனா

சந்தன தேசத்தின் டாப் மாடல், ஆக்ட்ரஸ் என கலர்ஃபுல் ஏரியாக்களில் ஸ்கோர் செய்பவர் ரஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் இருந்து டோலிவுட்டுக்கு வந்து டாப் கியரில் பறக்கிறார்.தெலுங்கில் இவர் அறிமுகமான ‘கீதகோவிந்தம்’ வசூலிலும் ஹிட் கஸாட்டா என்பதால் எல்லா மொழிகளிலும் ஆஃபர்ஸ் தேடி வருகிறது.

‘‘கர்நாடகாவில் உள்ள விராஜ்பேட்ல பிறந்தேன். ஸ்கூல் படிப்பை கூர்க்குல முடிச்சேன். அப்புறம் சைக்காலஜி, ஜர்னலிசம், ஆங்கில இலக்கியத்துல டிகிரி முடிச்சேன்...’’ என விசிட்டிங் கார்டை நீட்டும் ரஷ்மிகா மந்தனா, ‘க்ளீன் அண்ட் க்ளீயர் ஃப்ரெஷ் ஃபேஸ்’ பட்டம் வாங்கியவர்! வேண்டுமானால் அவர் கன்னத்தை தடவிப் பாருங்கள்!

ஷன்வி ­ஸ்ரீவஸ்தவா

‘மாஸ்டர்பீஸ்’ கன்னடப் படம் மூலம் சைமா அவார்டை குவித்த இவர், டோலிவுட் வாய்ப்புகளை உதறிவிட்டு சாண்டல்வுட்டில் மணக்கிறார்! ஜூனியர் என்டிஆர் நடித்த தெலுங்கு ‘ஜனதா கேரேஜி’ல் நடித்த விதிஷாவின் தங்கைதான் இவர். ‘‘பிறந்தது, வளர்ந்ததெல்லாம் வாரணாசில. மும்பைல பி.காம் படிச்சேன். மாடலிங் செய்யும்போது தெலுங்கு ‘அடா’ பட வாய்ப்பு வந்தது. அங்கிருந்து கன்னடம் வந்தேன்...’’  பூரிக்கும் ஷன்வியின் டார்கெட் இப்போதைக்கு சாண்டல்வுட்தானாம்.

நிதி அகர்வால்

நோ. காஜல் அகர்வாலின் உறவினர் அல்ல! நாக சைதன்யாவின் ‘சவ்யசாஷி’ தெலுங்குப் படம் வழியே நடிகையாகி இருக்கும் இவரது சொந்த ஊரே ஐதராபாத்தான்!‘‘ஆனா, வளர்ந்தது பெங்களூருல. எதிர்காலத்துல பயன்படும்னு இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளை தெரிஞ்சு வைச்சிருக்கேன்!பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிக்கிறப்ப மாடலிங் மயிலானேன்! முதல் அறிமுகமே பாலிவுட். அப்புறம்தான் தெலுங்கு...’’ குஷியாகும் நிதி, மீண்டும் பாலிவுட்டில் கமிட் ஆகியிருக்கிறார்.

தொகுப்பு: மை.பாரதிராஜா