வாட் இஸ் திஸ்?!இந்தக் கேள்வியைத்தான் நெட்டிசன்ஸ் எழுப்புகிறார்கள்.காரணம், நடிகை ரஷ்மிகா மந்தனா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவரது புகைப்படங்கள்!தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ப்ளாக்பஸ்டர் அடித்த ‘கீத கோவிந்தம்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர்தான் இந்த ரஷ்மிகா.

கார்த்தி நடிப்பில் ‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படம் வழியே தமிழுக்கு வலது காலை எடுத்து வைத்து நுழைகிறார் இவர்.இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்து கனவுக் கன்னியாக வலம் வருவார் என்று பார்த்தால்...தலையை சீவாமல், மேக்கப் போடாமல் தன் முகத்தை செல்ஃபி எடுத்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் ரஷ்மிகா.

இதற்குத்தான் நெட்டிசன்ஸ் அவரை ரவுண்டு கட்டி திட்டுகிறார்கள்.பின்னே... ஜவுளிக்கடை பொம்மைக்குக் கூட மேக்கப் போட வேண்டும் என எதிர்பார்க்கும் பூமியல்லவா இது!