அமேஸிங் அஜித்! சிலிர்க்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்



கிறுகிறுக்கும் சம்மரில் ஐஸ் பக்கெட் சேலஞ்சில் புகுந்து கோல்டுமெடல் வாங்கியவரைப் போல் ஜிவ்வென சிலிர்க்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ‘விக்ரம் வேதா’ ஹீரோயின். இப்போது அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’யில் லீட் ரோல், அருள்நிதியின் ‘கே13’ என டாப் கியரில் பறக்குது ஹோம்லி கோல்டு ஃபிஷ்.

‘நேர்கொண்ட பார்வை’யில் ஷ்ரத்தா எப்படி?

அதானே! இதே கேள்வி எனக்கும் தோணியிருக்கு! தமிழ்ல முதல் படம் கமிட் ஆகும் போதே நான் அஜித் சார் ரசிகைனு எல்லா பேட்டிகள்லயும் சொல்லியிருக்கேன். ரெண்டே வருஷத்துல அவர் கூட நடிக்கிற கனவு நிறைவேறிடுச்சு!‘விக்ரம் வேதா’ல என் பர்ஃபாமென்ஸ் நல்லா இருந்ததுனு சொல்லி போன டிசம்பர்ல தல படத்து டீம்ல இருந்து போன் பண்ணியிருந்தாங்க.

உடனே ஃபிளைட் பிடிச்சு சென்னை வந்துட்டேன். ஆடிஷன்ல கலந்துகிட்டேன். சில வாரங்களுக்குப் பிறகு திரும்பவும் கூப்பிட்டாங்க. இந்த முறை  லுக் டெஸ்ட் எடுத்து சென்ஸிபிளான ஒரு எமோஷனல் சீன்ல நடிக்கச் சொன்னாங்க. தென்... காஸ்ட்யூம் டெஸ்ட்.

ஃபைனலி கனவு நிறைவேறிடுச்சு! கேள்விப்பட்டதைவிட அஜித் சார் அமேஸிங் பர்சன். அவர் கூட நிறைய காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. இப்போதைக்கு இவ்வளவு போதும்! படம் ரிலீசானதும் தல பத்தி நிறைய சொல்றேன்!

லாயர் டு ஆக்ட்ரஸ்... அந்த வரலாறைச் சொல்லுங்க?

பூர்வீகம் கன்னட ஃபேமிலி. அப்பா ஆர்மில இருந்தாங்க. அம்மா ஸ்கூல் டீச்சர். ஜம்மு காஷ்மீர்ல உள்ள உதம்பூர்ல பிறந்தேன். இந்தியா முழுக்க இருக்கிற ஆர்மி ஸ்கூல்ல படிச்சேன். அப்புறம் லா. முடிச்சதும் பெங்களூர் ரியல் எஸ்டேட் நிறுவனத்துல லீகல் அட்வைசரா வேலை பார்த்தேன்.

மனசுக்குள்ள சினிமா ஆசை இருந்ததால வேலைல கான்சன்டிரேட் பண்ண முடியலை. பேஸிக்காகவே நான் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். கன்னடப் படம் ‘யூ டர்ன்’ வாய்ப்பு வந்ததும் சந்தோஷமா லாயர் வேலையை உதறினேன்.

‘யூ டர்ன்’ எனக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட். தமிழ்ல ஆஃபர்ஸ் வந்தது. இங்க முதல்ல கமிட் ஆன படம், நிவின்பாலி நடிச்ச ‘ரிச்சி’தான். அதோட ஆடிஷனை மறக்கவே முடியாது. அப்ப எனக்கு தமிழ் தெரியாது. ரொம்ப சிரமப்பட்டேன். அதோட இயக்குநர்தான் ‘உங்களால பண்ண முடியும்’னு நம்பிக்கை கொடுத்தார். ‘யூ டர்ன்’ டீஸரைப் பார்த்து ‘விக்ரம் வேதா’ வாய்ப்பு வந்தது. அடுத்து நான் பண்ணின படங்கள் பத்திதான் உங்களுக்கே தெரியுமே!

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் டு சினிமா... இந்த ட்ராவல் எப்படியிருக்கு?

சந்தோஷமா இருக்கு. ரெண்டுமே வேற வேற மீடியம். தியேட்டர் ப்ளேனாலே ஸ்டேஜ் பர்ஃபாமென்ஸ்தானே! ஒரு நாடகத்துல நடிக்க ரெடியாக மூணு மாசமாவது பிராக்டிஸ் பண்ணியாகணும்.

ஒரே வரி டயலாக்கைக் கூட மனப்பாடம் பண்ணிட்டே இருக்கணும். ஆனா, சினிமா அப்படியில்லை. சட்டுனு இயல்பா தோணுறதை பேசிடலாம். ஈஸியா இருக்கு. ஆனா, இந்த ரெண்டையும் தாண்டி நிறைய விஷயங்கள் பிடிக்கும். குறிப்பா குழந்தைகள். என் சிஸ்டரோட குழந்தையோட டைம் செலவழிக்கறதுதான் வீட்ல இருக்கிறப்ப என் முக்கிய வேலை!

அப்புறம், நான் ஒரு ரன்னிங் பறவை. தினமும் முக்கால் மணிநேரம்ரன்னிங் பிராக்டிஸ் பண்றதுண்டு. டிராவலிங் பண்றப்ப ரன்னிங் ரொம்பவும் உதவியா இருக்கும். ஜீன்ஸ் அண்ட் டீ ஷர்ட்ஸ் என் ஃபேவரிட் காஸ்ட்யூம். சீக்ரெட் ஹாபி, பர்ஃப்யூம் கலெக்‌ஷன்ஸ்!   

உங்களைப் பத்தி வந்த கிசுகிசுக்கள்ல உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எது?

நிறைய இருக்கு. பட். ஒரு நியூஸை சொல்றேன். சென்னைல புதுசா அஞ்சு பெட்ரூம் வசதி கொண்ட ஒரு வீட்டை நான் வாங்கியிருக்கறதா செய்தி படிச்சேன். அவ்ளோ வசதி இன்னும் வரல பாஸ்!                         

மை.பாரதிராஜா