நானும் கங்குலியும்!



எத்தனை ஆண்டுகள் இருக்கும்? 18?

ஏதோ ஒன்று. ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கங்குலி பீக்கில் இருந்த நேரம் அது. அப்போதுதான் சரசரவென தன் கிரிக்கெட் வாழ்க்கையில் சரிந்தார்.

காரணம் நக்மா!
அதே. ‘பாட்ஷா’ நக்மாதான்!

இருவருக்கும் இடையிலான உறவின் காரணமாகவே மைதானத்தில் சரியாக விளையாடாமல் போகிறார்... இதுவே கங்குலியின் வீழ்ச்சிக்குக் காரணம் என அப்போது எல்லா பத்திரிகைகளும் எழுதித் தள்ளின.நக்மாவும் சரி... கங்குலியும் சரி... அப்போது இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை.

இப்போது பல வருடங்கள் கழித்து நக்மா இதுகுறித்து விளக்கம் போன்ற ஒன்றை அளித்திருக்கிறார். ‘‘கங்குலிக்கும் எனக்கும் இடையேயான நட்பு மிகவும் அழகானது. அவருடைய ஆட்டம் பாதிக்கப்பட்ட சமயத்தில்தான் எங்கள் இருவருக்குமான நட்பும் நெருக்கத்தில் இருந்தது!

ஆனால், எங்களுடைய நட்புதான் கங்குலியின் ஆட்டத்தைப் பாதித்தது என்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது. அது எங்களுடைய இருவரின் மனதையும் நிறைய பாதித்தது.நிறைய சந்தர்ப்பங்களில் இதயத்தையே நொறுக்கினார்கள். எங்களுடைய நட்பு மனம் சார்ந்த விஷயமாகத்தான் இருந்தது.

மற்றவர்களின் பார்வை அதைப் புண்படுத்தியது. அதனால் இருவரும் சேர்ந்து பேசி பிரிவதென்று முடிவெடுத்துப் பிரிந்தோம்!’’ரைட். நக்மா, தன் தரப்பை சொல்லிவிட்டார். கங்குலி?இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை சொன்னால் இதே ‘குங்குமம்’ பக்கங்களில் அதை பகிர்ந்து அப்டேட் செய்கிறோம்!

காம்ஸ் பாப்பா