தேர்தல் 2019-நோட்டா நோட்ஸ்!நோட்டா (NOTA: None of The Above) என்பதற்கு ‘மேலே உள்ள எவரும் அல்ல’ என்று அர்த்தம். கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக நோட்டா பொத்தான் வைக்கப்பட்டது.
அந்த ஆண்டு நடைபெற்ற 5 சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு சதவீதத்துக்கு அதிகமான வாக்காளர்கள் நோட்டாவை தெரிவு செய்தனர்.

2017ல் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஒரு சுவாரஸ்யம். சிபிஎம், சிபிஐ, எஸ்ஏடி (அம்ரிஸ்டர்), இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் ஆப்னா பஞ்சாப் கட்சி ஆகிய 5 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை நோட்டா பெற்றிருந்தது!

‘ஒருவேளை நோட்டா வெற்றி பெற்றால் (வேட்பாளர்கள் பெற்றிருக்கும் வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றால்) அதற்கு அடுத்ததாக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றிபெற்றவராக இருப்பார்’ என்ற நிலைப்பாடே உள்ளது. இந்தியாவைப் போல் பிரான்ஸ், ஸ்பெயின், கிரேக்கம், சிலி, பிரேசில், உக்ரைன் போன்ற நாடுகளில் நோட்டா முறை அமலில் உள்ளது!  

நெட்டிசன்