தேர்தல் 2019-தேர்தல் முடிந்ததும் இதுதான் நடக்கும்!



நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்துவரும் நிலையில், தேர்வு செய்யப்படும் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எப்படிச் செயல்படுவார்கள்? நாடாளுமன்றம் எப்போதெல்லாம் கூடும்?

நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி - மே மாதங்களிலும்; மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை - செப்டம்பர் மாதங்களிலும்; குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் நடக்கும்.

வழக்கமாக மக்களவை காலை 11 மணி முதல் பிறபகல் 1 மணி வரையும், மீண்டும் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையும் நடைபெறும்.ஒவ்வொரு கூட்ட அமர்வின்போதும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரமாக எடுத்துக் கொள்ளப்படும். இதற்கான பதில்கள் தரும் நாட்களும் கேள்வி நேரத்தின்போதே தெரிவிக்கப்படும்.

மாநிலங்களவையைப் போன்றே மக்களவையும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இந்த மக்களவை ஆண்டுக்கு 3 முறை கூடும்.நிதிநிலை ெதாடர்பான மசோதாக்களை மாநிலங்களைவையில் நிறைவேற்ற முடியாது.

ஆனால், மக்களவையில் நிறைவேற்ற முடியும். இரு அவைகளிலும் எதிரொலிக்கப் பெறும் சர்ச்சைகள் அல்லது முடிவுக்கு வராத சர்ச்சைகள்... இரு அவைகளுக்கும் சேர்ந்து நடத்தப்பெறும் கூட்டுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். என்ன... மாநிலங்களவையை விட மக்களவையில் இருமடங்கு உறுப்பினர்கள் இருப்பதால்,  இந்த அவை மேலோங்கிச் செயல்படும்.      

நெட்டிசன்