நீட் உதாரணம்!



ரீடர்ஸ் வாய்ஸ்

‘இ வேஸ்ட்’ பொருட்களில் கலை வண்ணம் கண்டு, வியப்பூட்டும் கலைப்பொருட்களை உருவாக்கி அசத்தும் ஹரிபாபுவின் கைவண்ணம் பிரமிக்க வைத்துவிட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; இலக்சித், மடிப்பாக்கம்; மனோகர், மேட்டுப்பாளையம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; செம்மொழி, சேலையூர்.

‘தடம்’ வாயிலாக தமிழ்ப் படவுலகில் அழுத்தமாய் தடம் பதித்துவிட்ட மகிழ் திருமேனியின் ‘லைஃப் டிராவல்’ ஆச்சர்ய ரகம்.
- நிலவழகு, நீலாங்கரை; வேல்முருகன், நெல்லை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; செம்மொழி, சேலையூர்; உஷா முத்துராமன், திருநகர்; மயிலை.கோபி, அசோக் நகர்; சந்திரமதி, சென்னை.

அட, அந்த திருநங்கை ஷில்பா... நம்ம விஜய் சேதுபதியா! ஃபர்ஸ்ட் லுக்கிலேயே வியக்க வைத்த தியாகராஜன் குமாரராஜாவின் பேட்டியும் வியப்பு.
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; பிரேமா பாபு, சென்னை; சந்திரமதி, சென்னை; கருணாகரன், போரூர்; கே.பிரபாவதி, மேல
கிருஷ்ணன்புதூர்.

அபிநந்தன் விவகாரத்தின் இன்னொரு பக்கத்தைத் திறந்துகாட்டியது ‘மிக்-21’ கட்டுரை.
- ப.மூர்த்தி, பெங்களூரு; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; நிலவழகு, நீலாங்கரை; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; கலிவரதன், கீழ்கட்டளை.
மெத்தப் படித்தவர்களின் உலகமான மொழிபெயர்ப்புத் துறையில் மெத்தை வீடு கட்டும் ஷஃபியும் நுழைந்திருப்பது அதிசயம். அந்தக் கூலித் தொழிலாளியை தலை வணங்குகிறேன்.

- ஜெர்லின், ஆலந்தூர்; நிலவழகு, நீலாங்கரை; பிரீத்தி, செங்கல்பட்டு; ஆர்.ஜெ.சி, சென்னை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ப.மூர்த்தி, பெங்களூரு.‘கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்’ தொடரின் ஆரம்பமே அடுத்த வாரத்தை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய ஆவலுக்கு அஸ்திவாரம் போட்டுவிட்டது.
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; விஸ்வநாத், பெங்களூரு; மயிலை.கோபி, அசோக் நகர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; கவுரிநாத், பரங்கிமலை; ஜெர்லின், ஆலந்தூர்; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; புகழ்மதி, ஆதம்பாக்கம்.

பாகிஸ்தானின் பொருளாதாரத்தை முடக்க நினைத்தால், இந்தியாவுக்கு என்னென்ன கேடுகள் நேரிடும் என்பதைப் பற்றிப் படிக்கவே பதற்றமாக இருந்தது.
- வேலு, வேலூர்; சண்முகம், சென்னை; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

தெருக்களை ‘நீட்’டாக வைத்துக்கொள்கிற துப்புரவுத் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றிருப்பது மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணம்.
- பிரேமா பாபு, சென்னை; கைவல்லியம், மானகிரி; தெய்வசிகாமணி, சென்னை; மகேஸ்வரி, பொள்ளாச்சி.