அனுஷ்கா எங்கே..?



‘‘இதோ இங்கேதான் இருக்கிறேன்...’’ என இப்போதுதான் கையைத் தூக்கி பிரசன்ட் சார் சொல்லியிருக்கிறார் அனுஷ்கா.அப்படியானால் முன்பு?‘பாகுபலி 2’ மெகா மகா சக்சஸுக்குப் பின் அனுஷ்கா நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. தன் பங்குக்கு அவரும் எந்தப் படத்துக்கும் கால்ஷீட் தரவில்லை.

நெருங்கியவர்கள் தவிர வேறு யாருக்கும் எதுவும் சொல்லாமல் ஆஸ்திரேலியா சென்றவர் முழுமையாக ட்ரீட்மென்ட் எடுத்து தன் எடையை சரிபாதியாக குறைத்திருக்கிறார். மீண்டும் சிக் சைஸுக்கு வந்திருக்கிறார்!எனில், அடுத்து நடிப்புதானே?அதேதான். ‘இதோ இங்கதான் இருக்கேன்’ என அமெரிக்காவிலிருந்து இப்போது குரல் கொடுத்திருக்கிறார். நிஜமாகவே மாதவனுக்கு ஜோடியாக படம் ஒன்றில் நடித்து வருகிறார்.மீண்டு(ம்) வாம்மா மின்னல்...

காம்ஸ் பாப்பா