அஞ்சு பன்ச்-மணிரத்னம்*காலையில் 5 மணிக்கே எழுந்து கோல்ஃப் விளையாடப் போய் விடுவார். மழைக்காலத்திலும் விளையாட விரும்புவார்.

*சினிமாவில் என்றில்லை... பெரும்பாலும் ஒற்றைச் சொல்லாகவே கேள்வி கேட்டு பதில் பெறுவார். பதில்களும் அவ்விதம் இருப்பதையே விரும்புவார்.

*மகனும் நண்பனுமான நந்தன், லண்டன் லைகாவில் பணிபுரிகிறார். 30 வயதை நெருங்கப் போகிறார். தமிழகத்தின் முக்கியக் கோயில்கள் பற்றிய ஆராய்ச்சியும் செய்து வருகிறார்.

*கொடைக்கானலில் ஒரு பண்ணை வீடு இருக்கிறது. மே மாதம் முழுக்க அங்கேதான் வாசம். அது ஸ்கிரிப்ட்டை இறுதி செய்கிற நேரமாக இருக்கும்.

*கடிகாரம், மோதிரம் என அணிகலன்களை விரும்பமாட்டார். பருத்தி ஆடைகள் மட்டுமே அவரது தேர்வு.

நன்மதி