ட்ரீம் கேர்ள்!ம்க்கும். முதல் படமான ‘தாடக்’கில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இன்னும் நன்றாக நடித்திருக்கலாம் என சோடாபுட்டி கண்ணாடி அணிந்த விமர்சகர்கள் ஆராய்ந்து பார்த்து எழுதி, பேசி என்ன பயன்..?ஜான்வியும் அதுகுறித்து கவலைப்படவில்லை; ரசிகர்களும் அதைப் பொருட்படுத்தவில்லை.
தன் போக்கில் பத்திரிகைகளின் அட்டைகளுக்காக எக்ஸ்க்ளூசிவ் ஆக போஸ் கொடுக்கிறார். அந்தப் படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் ஏற்றுகிறார். லைக்குகளும் ஆர்ட்டின்களும் குவிகின்றன. இளைஞர்களின் மொபைல் வால் பேப்பராக அவை மிளிர்கின்றன.இதை மீறி ஓர் இளம் நடிகைக்கு வேறென்ன வேண்டும்?!கனவுக் கன்னிதான்! ரைட்டு. கலக்குங்க ஜான்வி!     

காம்ஸ் பாப்பா