வீடுதான் ஹோட்டல்!



சமீபத்தில் மும்பை ஃபேஷன் ஷோ ஒன்றில் ரேம்ப் வாக் செய்து அசத்தியிருக்கிறார் ‘பேட்ட’ மாளவிகா மோகனன். ‘‘மலையாளத்துல நாலு படங்கள் பண்ணியிருக்கேன். அங்கே நல்ல படங்கள் பண்ணினாலும், ரொம்பவே சின்ன பட்ஜெட்லதான் பண்றாங்க. ஏதாவது ஒரு லொகேஷனுக்கு ஷூட் போனா பெரிய ஹோட்டல்ல எல்லாம் தங்க மாட்டோம்.

படப்பிடிப்பு நடக்கற இடத்துக்கு பக்கத்துலயே ஒரு வீட்டை சில மணி நேரம் வாடகைக்கு பிடிச்சு, அதுல தங்கியிருப்போம். சூப்பர்ஸ்டாராக இருந்தாலும், லைட்பாய் ஆக இருந்தாலும் எல்லாரையும் ஒரே மாதிரிதான் அங்க ட்ரீட் பண்றாங்க!’’ கண்களில் ஆச்சரியம் விரிக்குது பொண்ணு! 

 மை.பா