நீயெல்லாம் சினிமாவுக்கே அவமானம்!



சென்னையில் ஊட்டி கிளைமேட் நிலவுவதைப் போல ஜிலீர் ஃப்ரெஷ் சிரிப்பில் உறைய வைக்கிறார் நந்திதா ஸ்வேதா. படங்களில் ஹோம்லி கசாட்டாவாக இனிப்பவர் தன் இன்ஸ்டா பக்கம் முழுவதிலும் மாடர்ன் மல்லிகையாக பர்ஃப்யூம் தெளிக்கிறார்.

சென்ற ஆண்டு டோலிவுட்டில் கவனம் செலுத்திய நந்திதா, புதிதாக தன் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அசத்துகிறார்!

சமீபத்தில் பிரபுதேவாவுடன் நடிக்கும் ‘தேவி 2’வின் ஷூட்டிங்குக்காக மொரீஷியஸ் சென்று வந்தவர், அங்கே அள்ளிய விஷுவல்களை ‘மொரீஷியஸ் டைரீஸ்’ ஆக பதிவிட்டு ‘பச்‘சக்கென ஒட்டிக்கொள்கிறார்.   

‘‘யெஸ். ‘மொரீஷியஸ் டைரீஸ்’க்கு செம ரெஸ்பான்ஸ். சந்தோஷமா இருக்கு. முதல் முறையா மொரீஷியஸ் போயிட்டு வந்திருக்கேன். அம்மாவும் வந்திருந்தாங்க. அந்த ஃபீல் நல்லா இருந்துச்சு. அதான் அப்படியே டிஜிட்டல் போஸ்ட்டா பண்ணிட்டேன்...’’ படபடவென பரவசமாகிறார் நந்திதா.

அதென்ன நந்திதா ஸ்வேதா..?

ஒரிஜினல் பெயர் ஸ்வேதா. கன்னடத்துல நந்திதானு அறிமுகமானேன். அந்தப் படம் ஹிட்டானதால நந்திதானு கூப்பிட ஆரம்பிச்சாங்க. எனக்கும் அந்தப் பேரு பிடிச்சுடுச்சு! ஆனா, இண்டஸ்டிரில நந்திதா தாஸ், நந்திதா ராஜ்னு நடிகைகள் இருந்ததால யூனிக்கா இருக்கட்டுமேனு என் ரியல் நேமையும் சேர்த்து நந்திதா ஸ்வேதாவாகிட்டேன்! இப்ப வீட்லயும் நந்திதானுதான் கூப்பிடறாங்க!

பார்ட்டி, ஃபங்ஷன்கள்ல உங்களைப் பார்க்க முடியறதில்லையே..?
ஐ ஹேட் சவுண்ட்ஸ். என் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல விசாரிச்சுப் பாருங்க... ‘போரிங் பர்சன்’னு என்னைப்பத்தி உச்சுக் கொட்டுவாங்க. பார்ட்டி, ஃபங்ஷன்னு சுத்தப் பிடிக்கலை. ‘நீயெல்லாம் சினிமால இருக்கேன்னு வெளில சொல்லிக்காத... அது இண்டஸ்டிரிக்கே அவமானம்’னு பலரும் கிண்டல் பண்றாங்க!

என்ன செய்ய... பிடிக்காததை பிடிக்கலைனுதானே சொல்லணும்! அதேமாதிரி பயணங்கள்லயும் ஆர்வம் இல்ல. ஷூட்டிங்கிற்காக சென்னை டு பெங்களூரு, ஹைதராபாத்னு ட்ராவல் பண்ண வேண்டியிருக்கு. அதாவது வேலைனு வந்துட்டா நான் வெள்ளைக்காரி! எனக்கு பைக் ரைட் பிடிக்கும். ஆறேழு வருஷமா பைக் ரைட் பண்ணிட்டிருந்தேன். இப்ப ரோட்டுல ஃப்ரீயாக ரைட் பண்ன முடியல. சின்ன வயசுல இருந்தே சமையல்ல ஆர்வம். நல்லா சமைப்பேன். ரெண்டு நிமிஷத்துல சேலை கட்டத் தெரியும்! ஸ்லீப்பிங் ரொம்ப பிடிக்கும். தொடர்ந்து 31 மணி நேரமெல்லாம் நான் ஸ்டாப்பா தூங்கியிருக்கேன்!

‘அம்மா நான் தூங்கப்போறேன்’னு முதல்நாள் சாயந்திரம் அம்மாகிட்ட சொன்னா மறுநாள் ராத்திரிதான் எழுந்திரிப்பேன்! அப்படி ஒரு கும்பகர்ணி.
எப்படி இருக்கு டோலிவுட்..?

அமேஸிங். கோலிவுட்டிலும் பிசியாகத்தான் இருக்கேன். தமிழ்ல ‘தேவி 2’ படத்தை முடிச்சிருக்கேன். பிரபுதேவா சார் படம். விஜய் சார் டைரக்‌ஷன். போன வருஷம் தெலுங்கில் நடிச்ச ‘ப்ளஃப் மாஸ்டர்’ கடந்த டிசம்பரில் ரிலீஸ் ஆகியிருந்தது. படத்துக்கு நல்ல வரவேற்பு. அடுத்து ‘அக்‌ஷரா’வை எதிர்பார்க்கறேன்.

நான் முதன்முதலில் கன்னடத்தில் அறிமுகமான ‘நந்தா லவ்ஸ் நந்திதா’ செம ஹிட் மூவி. அந்த டைம்ல இருந்தே தெலுங்கிலிருந்து நடிக்கக் கேட்டு ஆஃபர்ஸ் வர ஆரம்பிச்சிடுச்சு. ஆனா, ‘அட்டகத்தி’க்குப் பிறகு தமிழ்ல பிசியானேன். தெலுங்கிலும் கதைகள் வந்தது. பொறுமையா இருந்தேன். ‘எக்கடக்கி பொதவு சின்னவாடா’ மூலம் அங்க அறிமுகமானேன். அடுத்து ‘னிவாச கல்யாணம்’ல எனக்கு நல்ல
பெயர். போன வருஷம் ‘ப்ளஃப் மாஸ்டர்’ ஷூட் மறக்கவே முடியாதது. அதோட ஷூட் வைசாக்ல நடந்துச்சு.

அங்க என் ரிலேட்டிவ்ஸ் இருக்கறாங்க. அதனால தினமும் அவங்க வீட்ல இருந்து எனக்கு சாப்பாடு வந்துடும். இப்ப ஹைதராபாத்தும் பழகிடுச்சு. ‘அக்‌ஷரா’ டிரெயிலரைப் பார்த்தவங்க, ‘ஹாரர்ல நடிக்க பயமா இல்லையா’னு கேட்கறாங்க. அதில் எனக்கென்ன பயம்? ஐ லவ் ஹாரர் ஃபிலிம்ஸ்!      
              
மை.பாரதிராஜா