சேலைகள் பேசும்



‘‘ஆம்...’’ என்று கோரஸாக குரல் கொடுக்கிறார்கள் ‘Saree Speak’ என்கிற ஃபேஸ்புக் குரூப் பெண்கள்!80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பெண்களை உறுப்பினராகக் கொண்ட குரூப் இது. இதன் சென்னை டீம் சமீபத்தில் சந்தித்தது. மட்டுமல்ல, மூங்கில், வாழைநார் என  இயற்கைப் பொருட்களைக் கொண்டு சேலை நெய்யும் ஒரு நெசவாளரையும் அழைத்து வந்து கவுரவித்துள்ளது.‘‘இந்த குரூப் 2016ல்  ஆரம்பமாச்சு.
இதுல உலகம் முழுவதும் உள்ள பெண்கள் இருக்காங்க. சென்னையில மட்டும் நூத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள்  இருக்கோம். இன்னைக்கு ஃபேஷன் அதிகமாகிடுச்சு. அதனால, சேலை கட்டுற பழக்கம் பெண்கள்கிட்ட குறைஞ்சிட்டே வருது. அதை  ஊக்கப்படுத்தத்தான் இந்த குரூப்...’’ என்று ஆரம்பித்தார் இதன் உறுப்பினரான சுமதி வினித்.

‘‘இதிலுள்ள உறுப்பினர்கள் விதவிதமான சேலைகள் கட்டி அதை ஃபேஸ்புக்ல போஸ்ட் பண்ணுவாங்க. அதன் வழியா சேலை பத்தின பல  விஷயங்களைப் பேசிப்போம். இப்படி இருந்ததை சந்திப்பா மாத்தியிருக்கோம். அவ்வளவுதான். இதுமாதிரி இதிலுள்ள உறுப்பினர்கள்  அந்தந்த இடங்கள்ல சந்திப்பு நடத்துறாங்க. இந்தச் சந்திப்புகள்ல சேலைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் பத்தி பேசுறோம். இப்பல்லாம் நாங்க உடுத்துற சேலை எந்த ஊரைச் சேர்ந்தது? எப்படி நெய்றாங்க? அதன் முக்கியத்துவம் என்ன? இப்படியான எல்லா  விஷயங்களையும் தெரிஞ்சிகிட்டே கட்டுறோம்.

இந்தத் தடவை முதல்முறையா நெசவாளர் சேகரை வரவழைச்சோம். அவரோட மூங்கில், வாழைநார் சேலைகள் டிசைனை எங்களிடம்  காட்டினார். அது உருவான கதையையும் எங்ககிட்ட பகிர்ந்துகிட்டார். ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. ஒரு நெசவாளர் எவ்வளவு  கஷ்டப்பட்டு ஒவ்வொரு சேலையையும் உருவாக்குறார்னு புரிஞ்சுது.எப்படி அவர் பிசினஸை பெரிய லெவலுக்கு கொண்டு போகலாம்னு சில  ஐடியாக்களும் கொடுத்தோம். ஆன்லைன் வழியா அவரின் பிசினஸைக் கொண்டு போக எங்களாலான உதவியை செய்யப்போறோம். இது  முதல்கட்டம்தான். இதுபோல எங்க டீம் மூலம் எல்லா நெசவாளர்களையும் ஊக்கப்படுத்தப் போறோம்...’’ உற்சாகம் பொங்க சொல்கிறார்  சுமதி வினித்!

-பேராச்சி கண்ணன்
படங்கள் : யுவராஜ்