விக்ரம் : அஞ்சு பன்ச்




*ஜிம்மிலேயே பழியாகக் கிடப்பார். உடற்பயிற்சியின் அனைத்து திறன்களும் அவருக்கு அத்துப்படி. உடனடியாக உடலை ஏற்றவும்  குறைக்கவும் தெரியும்.

*டைரக்டர் பாலா மீது தனிப்பிரியம் உண்டு. இரண்டு பேருக்கும் இடையில் உள்ள அக்கறையையும், மரியாதையையும் அவர்களின்  பேச்சிலே உணர முடியும்.

*ஷூட்டிங்கிற்காக அவுட்டோர் செல்கையில் அந்தப் பகுதியிலுள்ள ரசிகர்களை தேடிச் சென்று சந்திப்பார்.

*கேரளாவில் பேரழிவு ஏற்பட்டபோது பெரும்தொகை கொடுத்து உதவினார். ‘கஜா’ புயலின்போதும் அவ்விதமே.

*மகன் துருவ்வும் விக்ரமும் நண்பர்கள் மாதிரிதான். அவர்கள் வீட்டில் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து வருகிறவர்கள்  ஆச்சரியப்படுவார்கள்.

-நன்மதி