ஒளிப்பதிவாளரின் மகள்!



‘பேட்ட’ கொடுத்த நல்வரவுகளில் ஒருவர் மாளவிகா மோகனன். ‘‘கேரளா பையனூர்ல பிறந்தேன். வளர்ந்ததெல்லாம் மும்பைலதான்.  அப்பா கே.யூ.மோகனன், ஒளிப்பதிவாளர். பாலிவுட்டில் சல்மான்கான் நடிச்சு, நைன்டீஸில் ஹிட்டான ‘தும் தில் தே சுக்கே சனம்’ உட்பட  பல படங்களுக்கு கேமரா பண்ணியிருக்கார்.

லேட்டஸ்டாகக் கூட அனுராக் ‌காஷ்யப்பின் ‘லஸ்ட் ஸ்டோரீஸி’ல் ஒர்க் பண்ணியிருக்கார். மலையாளத்தில் ‘பட்டம்போலே’ படத்துல  அறிமுகமானேன். தமிழ்ல என் முதல் படமே ரஜினி சார் படமா அமைஞ்சது சந்தோஷமா இருக்கு...’’ என கண்கள் படபடக்க  புன்னகைக்கிறார் மாளவிகா.

-மை.பா