ஆஹாஷி!இந்தி நடிகர் சத்ருஹன் சின்காவின் மகள்... ரஜினியுடன் ‘லிங்கா’வில் நடித்தவர்... போன்ற இன்ட்ரோவை எல்லாம் லூசில் விட்டுவிட்டு நேரடியாக சோனாக்‌ஷி சின்கா குறித்த செய்திக்கு செல்லலாம்.மீடியாவில் தொடர்ந்து இவர் அடிபட காரணம், டிரஸ்ஸிங் சென்ஸ். கண்றாவியாக இருக்கிறது... ஹைகோர்ட் (நன்றி: எச்.ராஜா!) மாதிரி இருக்கிறது... உடை குறித்த அறிவே இல்லை... என்றெல்லாம் ஏகத்துக்கும் கிண்டலடிக்கப்பட்டார். அதாவது கடந்த காலங்களில்.

இப்போது..? உச்சியில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அதுவும் எப்படி..? ‘வெரைட்டியாக டிரெஸ் அணிந்து அசத்துகிறார்... தன்னையே பரிசோதனை எலியாக்கி டிரஸ்ஸிங் டிரெண்டை உருவாக்குகிறார்...’ என்று!ஆக, கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் பேசும் பொருள் ஒன்றுதான். பேசப்படும் விதம்தான் வேறுபடுகிறது!

காம்ஸ் பாப்பா