உசிலம்பட்டி லைசன்ஸ் ஆஸ்திரேலியாவில் செல்லும்!



மெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கார், பைக் ஓட்ட இனி தனி இன்டர்நேஷனல் லைசன்ஸ் தேவையில்லை. நாம் சாதாரணமாக போக்குவரத்து அலுவலகத்தில் பெற்றுள்ள வாகன உரிமமே போதுமானது. சுற்றுலாவாசிகளை ஈர்க்கும்விதமாக அண்மையில் இந்திய வாகன உரிமம் கொண்டே கார்களை இயக்கலாம் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும் இடதுபுறம் வாகனம் ஓட்டும் பழக்கம் தான் என்பதால் பிரச்னையில்லை.

“சுயமாக கார் ஓட்டும் பழக்கம் அதிகம் கொண்ட இந்தியர்கள் அதிகளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். உங்கள் லைசென்ஸுடன் I-94 என்னும் அமெரிக்காவுக்கு நீங்கள் வந்த தேதியைக் குறிப்பிடும் பேப்பரை வைத்திருந்தால் போதும்” என்கிறார் அமெரிக்க சுற்றுலா மேலாளரான டெபோலின் சென். இதேபோல ஸ்விட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் இந்திய அரசின் வாகன உரிமங்களை சிற்சில அடையாள அட்டை ஆதாரங்களுடன் ஏற்கின்றன.

- ரோனி