அதிதியின் ஸ்கின் சீக்ரெட்ஸ்!வெனிலா ஐஸ்க்ரீம் வொயிட் ஸ்மைல்... மேக்னட் ஹனி வாய்ஸ்... என அட்ராக்ட்டிவ் ஆக இருக்கிறார் அதிதிராவ் ஹைதாரி.  மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வான’த்தில் அரவிந்த்சாமியின் இல்லீகல் காதலியாக இளசுகளைச் சுண்டி இழுத்தவர்.யாருக்குப்  பொருந்துகிறதோ இல்லையோ ‘ஒரு கூடை சன் லைட்... ஒரு கூடை மூன்லைட்... ஒன்றாகச் சேர்ந்தால் அதுதான் என் வொயிட்...’ என்பது  அதிதிக்கு நூறு சதவிகிதம் பொருந்தும்.  ‘‘அப்படியா சொல்றீங்க..? ஸோ ஸ்வீட்!’’ வெட்கப்படும் அதிதி, ‘காற்று வெளியிடை’க்குப் பிறகு  மறுபடியும் மணிரத்னம் படத்தில் நடித்தது நிச்சயம் ஆசீர்வாதம்தான் என்கிறார்.

‘‘வேறென்ன சொல்ல?! ‘பம்பாய்’ படத்தை இந்தில பார்த்தப்ப ஆச்சர்யப்பட்டேன். மனீஷா மேக்கப் இல்லாமக் கூட அவ்ளோ அழகா,  க்யூட்டா அதுல இருந்தாங்க. அவங்க கேரக்டரை பார்த்ததும் ரொம்ப பிடிச்சுப் போச்சு. ஐ லவ் ஆக்ட்டிங்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்.  மனீஷா மாதிரி  நல்ல நடிகையாக ஆகணும்னு விரும்பி ஆக்ட்டிங் பக்கம் வந்தேன். ‘காற்று வெளியிடை’யில கிடைச்சதும்  சந்தோஷப்பட்டேன். மறுபடியும் மணி சார், ஏ.ஆர்.ரஹ்மான் காம்பினேஷன்... அப்புறம் அரவிந்த்சாமி சார்னு நல்ல டீம் அமைஞ்சது என்  அதிர்ஷ்டம்தான்...’’ சொல்லும்போதே அதிதியின் கண்கள் மின்னுகின்றன.

அதிதி ஒரு அதிகாலைப் பறவையாமே...?


ஆமா! அது எங்க ஃபேமிலி ஹேபிட். பிறந்தது ஹைதராபாத்னாலும் வளர்ந்தது மும்பைல. ஆனா, பாட்டி, அம்மாவோட ஃபேமிலி எல்லாம்  ஹைதராபாத்துலதான் இப்பவும் இருக்காங்க. மும்பைல ஸ்கூல், காலேஜ் முடிச்சேன். ஹாலிடேஸுக்கு வீட்டுக்கு வர்றப்ப தெலுங்கு பேச  கத்துக்கிட்டேன். ஆனா, சரளமா பேச வராது!எங்க ஃபேமிலில எல்லாருமே அதிகாலைல எழுந்துப்பாங்க. எங்க பாட்டி, ஒரு ரைட்டர்!  அவங்க அஞ்சு மணிக்கே எழுந்து தன் எழுத்து வேலையை ஆரம்பிச்சுடுவாங்க. அம்மா, பாடகி. ஸோ, அவங்களும் சீக்கிரமா எழுந்து  தம்புராவை மீட்டிகிட்டே சாதகம் செய்வாங்க.

இந்தப் பழக்கம் எனக்கும் வந்துடுச்சு! ஸ்கூல் எக்சாம் அப்ப காலைல நாலு மணிக்கே எழுப்பிடுவாங்க! அம்மாவைப் பார்த்து எனக்கும்  சங்கீதத்துல ஆர்வம் வந்தது. அப்புறம் பரத க்ளாஸுக்கு போக ஆரம்பிச்சேன்.ஆனா, இப்ப கொஞ்சம் லேட்டாதான் எழுந்துக்கறேன். ஏழு,  ஏழரை ஆகிடுது! பட், அதிகாலை எழுந்து சூரிய உதயத்தைப் பார்க்கறது அவ்வளவு இனிமையான அனுபவம்! பாடகியாகணும்னு ஆசை  இருக்கு. குறிப்பா ஏ.ஆர்.ரஹ்மான் இசைல பாடணும்னு கனவு கண்டேன். அது ‘காற்று வெளியிடை’ல நிறைவேறிச்சு! ‘வான் வருவான்...’  பாடலைப் பாடினது மறக்க முடியாத அனுபவம்!   

உங்க கண்கள் செம க்யூட். ஸ்கின் டபுள் சூப்பர்... என்ன ரகசியம்..?

இன்னிக்குதான் முகத்துல கொஞ்சம் மேக்கப் போட்டிருக்கேன். ஒருவேளை அதனாலதான் அழகா தெரியறேனோ என்னவோ?! ஜோக்ஸ்  அபார்ட். கண்கள் அழகா இருக்கக் காரணம், எங்க அப்பா அம்மா. அவங்க கொடுத்த சொத்து! எப்பவும் கண்களுக்கு மஸ்காரா யூஸ்  பண்றதில்ல. நைட் சீக்கிரம் தூங்கிடுவேன். இப்படி செய்தா மறுநாள் எழுந்திருக்கிறப்ப கண்கள் ஃபிரெஷ்ஷா இருக்கும்.படங்கள்ல நடிக்கிறப்ப  கூட மஸ்காரா மாதிரி திங்ஸ் பயன்படுத்தறது குறைவுதான். கூடுமான வரை மேக்கப்புல கெமிக்கல் பொருட்களைத் தவிர்த்துடுவேன்.  அப்புறம் ஸ்கின்... இதுவும் ஜெனடிக்கா அமைஞ்சதுதான். சின்ன வயசுல இருந்தே ஆர்கானிக் ஃபுட்ஸ்தான் சாப்பிடறேன். ஒருவேளை  இதுவும் என் ஸ்கின் சூப்பரா இருக்கக் காரணமா இருக்கலாம்!

ஆக்சுவலா என் ஸ்கின் சென்ஸிடிவ்வானது. சின்ன கொசு கடிச்சா கூட இட்லி மாதிரி வீங்கிடும்! ஸ்கின்னை பராமரிப்பது ஒரு கலை.  எப்பவும் நிறைய தண்ணீர் குடிக்கணும். வீட்ல இருக்கிறப்ப முகத்துல பப்பாளிப் பழ பேஸ்ட்டை பூசிப்பேன். ஹனி மாய்ஸ்ச்சரைஸ் அப்ளை  பண்ணுவேன். கெமிக்கல் அதிகம் உள்ள பொருட்களை குறைச்சுடுவேன். சோப் பயன்படுத்தறதில்ல. ஃப்ரெஷ் ஃபுரூட்ஸ் சாப்பிடுவது  ஹெல்த்தி.  அப்புறம் தூங்கப்போறப்ப ஒருவேளை மேக்கப் போட்டிருந்தா அதை சுத்தமா வாஷ் பண்ணிடுவேன். அது எவ்வளவு காஸ்ட்லி  மேக்கப்பா இருந்தாலும் சரி... அப்படியே தூங்க மாட்டேன். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... Happiest girl is the prettiest girl! இதுதான் என்  சீக்ரெட்!   

கிளாமராவும் கலக்குறீங்க..?

கிளாமர் ஒண்ணும் கெட்ட விஷயமில்ல. அது lovely thing. என் குடும்பம் சினிமா தொடர்பானது இல்ல. ஆனாலும் நல்ல ரோல்ஸ் எனக்குக்  கிடைக்குது. பாலிவுட்ல இருந்து கோலிவுட் வரை நல்ல நல்ல ஸ்கிரிப்ட் அமையுது. சஞ்சய்லீலா பன்சாலி, மணிரத்னம் மாதிரி பெரிய  இயக்குநர்கள், டெக்னீஷியன்கள் படங்கள்ல நடிப்பது நிச்சயம் அதிர்ஷ்டம்தான். கடினமா உழைக்கறது மட்டும்தான் எனக்குத் தெரிஞ்ச ஒரே  விஷயம்!
 
நடிகையான பிறகு லவ் புரபோசல் வந்திருக்கா..?


ம்ம்ம்... ரசிகர்கள் நிறைய பேர் சொல்லியிருக்காங்க. ஒரு சமயம் துருக்கி போயிருந்தேன். அங்க ஒரு ரசிகர், ‘நீங்க எங்க இருந்து  வந்திருக்கீங்கனு சீரியஸா கேட்டார். ‘இந்தியாவுல இருந்து’னு சொன்னதும் சிரிச்சார். ‘இதுல சிரிக்க என்ன இருக்கு’னு கேட்டேன். ‘இல்ல...  நீங்க சொர்க்கத்துல இருந்து வந்தீங்கனு நினைச்சேன்’னார்! இப்படி நிறைய ஜொள்ஸையும் கேட்கறேன்!

-மை.பாரதிராஜா