20 ஆண்டுகளுக்குப் பின் பிரதமருக்கு ராக்கி கட்டிய பாக். பெண்மணி!ரக்‌ஷா பந்தன் தினத்தில் பெண்கள் தம் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி ஆயுளுக்கும் தம் சேஃப்டியை உறுதி செய்வது வழக்கம். இந்த ஆண்டு ரக்‌ஷா பந்தன் அன்று பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டியுள்ளார் பாகிஸ்தான் பெண்மணி ஒருவர். இது அவரது 20 ஆண்டுக் கனவு!

பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட காமர் மொஹிஷின் ஷேக் என்ற பெண்மணி, பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி நாடெங்கும் பிரபலமாகியுள்ளார்.“பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்ட ஏறத்தாழ 20 ஆண்டுகளாக முயற்சித்து வந்தேன். இவ்வாண்டு என் கனவு நிஜமாகியுள்ளது” என நெகிழ்ந்துள்ளார் மொஹிஷின் ஷேக். ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரசாரகராக இருந்தபோதிலிருந்து மோடியைப் பின்தொடரும் மொஹிஷினின் ராக்கி ஆசையை மோடி அறிந்து இப்போது நிறைவேற்றியுள்ளார்.    

- ரோனி