ரகுலின் சம்பளம்!‘என்ன ஒரு கோடி ரூபாய் இருக்குமா..?’ என தேநீரை உறிஞ்சியபடி சர்வசாதாரணமாகக் கேட்பீர்கள். இதெல்லாம் தெலுங்கு, தமிழ்ப் படங்களில்தான் பாஸ். இந்தியில்? ‘இதைவிட டபுளா’ என புருவத்தை உயர்த்த வேண்டாம். இதில் பாதி அல்லது பாதியை விட குறைவு. அவ்வளவுதான்!

என்றாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ரகுல் ப்ரீத் சிங் ‘கொடுப்பதைக் கொடுங்க...’ என்றபடி இந்தியில் நடிக்க முயற்சித்து வருகிறார். காரணம், ஒரேயொரு சக்சஸ் பாலிவுட்டில் கிடைத்தால் போதும். அதன் பிறகு தேசிய அளவில் விளம்பரப் படங்களில் நடிக்க வாய்ப்பு வரும். கூடவே சம்பளமும் எகிறும். ஹாலிவுட்டும் கதவைத் தட்டும்.குடுமி சும்மா ஆடாது!