பழிக்குப்பழி இளைஞர்கள்!



இரண்டு மாதங்களுக்கு முன்பு ரம்ஜான் விடுமுறைக்கு பூன்ச்சிலுள்ள வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் ஆரங்க சீப், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் காஷ்மீரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.இப்போது சவுதி அரேபியாவில் பணியாற்றும் ஐம்பதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இச்சம்பவத்திற்குக் காரணமான தீவிரவாதிகளைப் பழிவாங்க ராணுவத்தில் இணைய முடிவு செய்துள்ளனர்.

‘‘எங்கள் சகோதரன் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அன்றே வேலையை விட்டு விலகுவது என முடிவு செய்துவிட்டோம். ஐம்பது பேர் இணைந்துள்ள எங்கள் குழுவின் ஒரே நோக்கம், ஆரங்கசீப்பின் கொலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவதுதான்...’’ என்கிறார் சவுதி ரிட்டர்ன் இளைஞர் முகமது கிராமத். ஆரங்கசீப்பின் தந்தை உட்பட அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே ராணுவப்பணியில் இருந்தது / இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரோனி