பெண்களைத் தவிர்க்கும் நிறுவனங்கள்!



கடந்தாண்டு மார்ச் 9 அன்று அமலுக்கு வந்துள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவ கால விடுமுறை சட்டத்தால் பெண்கள் வேலையிழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது! 12 வாரங்களாக இருந்த பிரசவகால விடுமுறை அரசின் புதிய சட்டத்தால் 26 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வகை தொழில்பிரிவுகளில் பணியாற்றும் 12

கோடிக்கும் மேற்பட்ட பெண்களில் 1 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு விடுமுறைக்குப் பின் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளின் பிறப்புக்கு மட்டுமே அரசின் பிரசவ விடுப்பு விதி பொருந்தும். சுற்றுலா, சூப்பர் மார்க்கெட், வணிகம், உற்பத்தித்துறை சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரசவ விடுப்பு முடிந்தாலும் பெண்களைத் திரும்ப பணிக்குச் சேர்க்க தயங்குகிறார்கள்.

- ரோனி