நல்லா சாப்பிடுவேன்... டயட் பத்தி பயப்படறதில்ல!நிவேதாவுடன் ஜாலி chat!

தாவணியில் தமிழ்நாட்டு தக்காளி... டைட் ஜீன்ஸில் ஹாலிவுட் அல்வா... சுடிதாரில் பாலிவுட் பப்பாளி... என ஒவ்வொரு காஸ்ட்யூமிலும் கலர்ஃபுல்  காக்டெயிலாக இனிக்கிறார் நிவேதா பெத்துராஜ். ‘‘Lieutenant Swathi Defence Space Division for ‘டிக்டிக்டிக்’... Thank you for accepting  the film and pouring love... extremely overwhelmed by all of your love and response...’’ என பாண்டிச்சேரியில் நள்ளிரவில்  ‘ஜெகஜாலகில்லாடி’யின் ஷூட்டிங் பிரேக்கில் மொபைலில் டைப்பிக் கொண்டிருந்த நிவேதாவிடம் பேசினால் அள்ளுது எனர்ஜி.

செம ஹேப்பியா இருக்கீங்க போல... ?

ஆமா. ‘டிக் டிக் டிக்’குக்கு இவ்ளோ பாராட்டுக்கள் வரும்னு நினைச்சுக் கூடப் பார்க்கல. வாட்ஸ் அப்ல பொக்கேஸ் குவியுது. எல்லாருக்கும் தேங்க்ஸ்  சொல்லிட்டிருக்கேன். சின்ன வயசுல இருந்தே அட்வென்ச்சர் பண்ணப் பிடிக்கும். காலேஜ் டைம்ல ட்ரெக்கிங், ஸ்கூபா டைவிங்னு இன்ட்ரஸ்ட்  இருந்தது. ‘டிக் டிக் டிக்’ ஷூட்டுக்கு முன்னாடி டைரக்டர் சக்‌தி சௌந்தர்ராஜன் சார் கூப்பிட்டு ‘அந்தரத்துல நீங்க 360 டிகிரில கயித்துல சுத்திச் சுழல  வேண்டியிருக்கும். மூணாறுல ட்ரெக்கிங் போக வேண்டியிருக்கும்’னு சொன்னார். அப்பவே இந்தக் கேரக்டரை மிஸ் பண்ணிடக்கூடாதுனு  முடிவெடுத்தேன்.

துபாய்ல மார்ஷியல் ஆர்ட்ஸ் படிச்சதால ரோப்ல தொங்கறது ஈசியா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, என் கணிப்பு மிஸ்ஸாகிடுச்சு! காலைல  ஒரேயொரு இட்லி சாப்பிட்டாதான் ரோப்ல தொங்கறப்ப ரிஸ்க் இல்லாம இருக்கும். தண்ணீரும் அதிகமா குடிக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. இப்படி  பல சிரமங்களோடு நடிச்சது மறக்க முடியாத அனுபவம். மூணாறுல கொளுத்தற வெயில்ல ட்ரெக்கிங் போனது செம த்ரில். ஆக்சுவலா என்னை விட  ரவி சாருக்குத்தான் அதிக கஷ்டம். காலைல அவரை கயித்துல கட்டி தொங்க விட்டாங்கனா... ஷூட் முடிஞ்ச பிறகுதான் ரிலீஸ் பண்ணுவாங்க.  அதுவரை பொறுமையா இருந்தார். பாசிட்டிவ் எனர்ஜிக்கு அவர்தான் உதாரணம்!

இப்ப நடிக்கற படங்கள்..?

எழில் சார் டைரக்‌ஷன்ல விஷ்ணு நடிக்கிற ‘ஜெகஜால கில்லாடி’ போயிட்டிருக்கு. கனடால இருந்து ஹாலிடேக்கு நம்ம கிராமத்துக்கு வர்ற பெண்ணா  இதுல நடிச்சிருக்கேன். வெங்கட்பிரபு சாரோட ‘பார்ட்டி’ல என்ன கேரக்டர்னு இப்ப சொல்ல முடியாது. அப்புறம் விஜய் ஆண்டனி சாருடன் ‘திமிர்  பிடிச்சவன்’ல போலீஸா நடிச்சிட்டிருக்கேன். அடுத்து  பிரபுதேவா சாரோட ஒரு படம். டைட்டில் இன்னும் வைக்கல. அதோட ஷூட்டும்  போயிட்டிருக்கு. தெலுங்குல ‘மென்டல் மதிலோ’ படத்துக்குப் பிறகு, அதே டைரக்டரோட அடுத்த படத்துல நடிக்க கமிட் ஆகியிருக்கேன்.

தெலுங்கிலும் கவனம் செலுத்தறீங்களா..?

அப்படி சொல்லிட முடியாது. தமிழ்லதான் நிறைய படங்கள் பண்ணிட்டிருக்கேன். தெலுங்கு கொஞ்சம் புரிய ஆரம்பிச்சிருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல  சரளமா பேசக் கத்துக்குவேன்னு நம்பறேன். நல்ல கேரக்டர்களை மட்டுமே செலக்ட் பண்ணி நடிச்சிட்டிருக்கேன். கேரியர் ஹேப்பியா போயிட்டிருக்கு.    

இப்ப நீங்க மதுரை பொண்ணா, துபாய் பொண்ணா..?

ரெண்டும். கூடவே நம்ம சென்னையும் உண்டு. அப்பாவும், அம்மாவும் இன்னமும் துபாய்லதான் இருக்காங்க. ஷூட் இருந்ததுனா மூணு மாசத்துக்கு  ஒருமுறை அவங்களை பறந்து போய் பார்த்துட்டு வர்றேன். இல்லைனா அவங்க இங்க வருவாங்க. ஷூட் இல்லைனா மாசத்துக்கு ஒருமுறை அங்க  போயிடுவேன்.

பாய் ஃப்ரெண்ட்... டேட்டிங்..?

இருந்தா கண்டிப்பா சொல்லுவேன்! ஒரு விஷயம்... மும்பை ஹீரோயின்ஸ்கிட்ட கேட்கற மாதிரியே நம்ம பெண்கள்கிட்ட கேட்காதீங்க. வெளிப்படையா  பதில் வராது! ஆக்சுவலா பாய் ஃப்ரெண்ட் பத்தி சிந்திக்கிற ஐடியா இப்ப இல்ல.
 
சினிமா தவிர எதில் ஆர்வம்?
 
காலேஜ் டேஸ்ல பெயின்டிங்ல ஆர்வம் இருந்தது. இப்பவும் வரைவேன். ஆனா, நேரம் இல்ல. வரைஞ்ச ஆக்ரிலிக் பெயின்டிங்கை பத்திரமா  வைச்சிருக்கேன். தென்... சாப்பாட்டு ராமி! ராமனுக்கு எதிர்ப்பதம். எந்த ஊருக்குப் போனாலும் அங்க என்ன ஸ்பெஷலோ அதை ஒரு கட்டு கட்டுவேன்.  டயட் பத்தி பயந்ததில்ல. இந்தியன் ஃபுட்ஸ் தவிர அரபி, சைனீஸ் ஃபுட்ஸும் இஷ்டம். கார் டிரைவிங் பிடிக்கும். கிரிஸ்டல்ஸ் கலெக்‌ஷன்ஸ்  வச்சிருக்கேன். கிரிஸ்டல்ஸை சேகரிக்கிற எண்ணம் எப்படி வந்ததுனு தெரியலை. ஆனா, சில வருஷங்களாக அதை கலெக்ட் பண்ண  ஆரம்பிச்சிருக்கேன்.

சமீபத்தில் பார்த்த படம்?

‘ஜுராஸிக் வேர்ல்ட் - ஃபாலிங் கிங்டம்’. சென்னைலதான் பார்த்தேன். நடிக்க வர்றதுக்கு முன்னாடி தினம் ஒரு படம் பார்ப்பேன். அது எந்த மொழிப்  படமாவும் இருக்கும். இப்ப அப்படி பார்க்க டைமில்ல. பட், அப்ப பார்த்தது இப்ப நடிக்க உதவியா இருக்கு!

மை.பாரதிராஜா