ராஜஸ்தானில் கற்றல் முறை!



மனிதர்களை விட பசுக்கள் மீது பாசமாக உள்ள வசுந்தரா ராஜே தலைமையிலான ராஜஸ்தான் அரசு இப்போது  பள்ளியின் கற்றல் முறைகளை சீர்திருத்தத் தொடங்கியுள்ளது.

அந்தவகையில் மாதம்தோறும் மூன்றாவது சனிக்கிழமை புனிதர்களின் சொற்பொழிவைக் கட்டாயமாக்கி உள்ளது.  மாதத்தின் முதல் சனிக்கிழமை, வரலாற்று நாயகர்களை அறிமுகப்படுத்துவதும்; இரண்டாவது சனிக்கிழமை  அறநீதிக்கதைகளைக் கூறுவதும்; நான்காவது சனிக்கிழமை வினாடி வினா நிகழ்ச்சியும்; ஐந்தாவது சனிக்கிழமை  தேசபக்திப் பாடல்களைப் பாடுவதும் பள்ளியின் நிகழ்ச்சி நிரல்களாகப் பின்பற்ற வேண்டுமென மேல்நிலைக்கல்வி  வாரியம் உத்தரவிட்டுள்ளது.அரசு, அரசு உதவி பெறும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் இது பொருந்தும்.                     

-ரோனி