சாம்பார் சமந்தா!ரீடர்ஸ் வாய்ஸ்

ருசியாக சாம்பார் வைத்து ‘சாம்பார் சமந்தா’ என எதிர்காலத்தில் நடிகை சமந்தா புகழ் பெற வாழ்த்துவோம்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; நடராஜன், திருமுல்லைவாயில்; முருகேசன், கங்களாஞ்சேரி; சித்ரா, திருவாரூர்; வண்ணை கணேசன்,  பொன்னியம்மன்மேடு; நரசிம்மராஜ், மதுரை; ஜெயச்சந்திரபாபு, சென்னை.

இங்கிலாந்து இளவரசரின் 325 கோடி ஆடம்பர திருமணம் தலையை கிறுகிறுக்க வைத்தது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை; பூதலிங்கம், நாகர்கோவில்; முருகேசன், கங்களாஞ்சேரி; நரசிம்மராஜ், மதுரை; கைவல்லியம், மானகிரி.

அந்தநாள் முதல் இன்றுவரை தொட்டுத் தொடரும் தமிழ் சினிமா சென்டிமென்ட்ஸை அலசி ஆராய்ந்து தொகுத்திருப்பது சுவாரசிய சுண்டல்.
- பூதலிங்கம், நாகர்கோவில்.

‘கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யா - சாயிஷா ஜோடியின் தாறுமாறு ஸ்டில்களைப் போட்டு படத்தில் டபுள்மீனிங் கிடையாதுங்கிறது கிளுகிளு குசும்பு.
- ஜெயச்சந்திரபாபு, சென்னை.

‘ஹோம் அக்ரி’ தொடரின் வழிகாட்டலும் கேள்வி- பதில்களும் உற்சாகம் தருகிறது.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

‘சீரியல்களை உருவாக்க சிம்பிள் ஐடியா போதும்’ என்று சொன்ன சி.ஜெ.பாஸ்கர் பேட்டி செம ஜோர்.
- டி.நரசிம்மராஜ், மதுரை; மைதிலி, கங்களாஞ்சேரி.

திருவாரூர் பாபுவின் எழுத்தில் கிடைத்த தியாகேசனின் அருளில் மனம் தெளிந்தது.
- மயிலைகோபி, அசோக்நகர்.

மதுரை கலைச்செல்வியின் 3டி பெயிண்டிங் வகுப்பு பற்றிய செய்தி, சுயதொழிலுக்கு உரம்.
- டி.நரசிம்மராஜ், மதுரை.

டெக்னாலஜி நிறுவனங்களின் உளவியல் தந்திரங்களை உடைத்துச் சொன்ன கட்டுரை மிரட்டல்!
- கைவல்லியம், மானகிரி.

முதல் மருத்துவமனை பற்றிய அரிய வரலாற்றுத் தகவல்கள் சூப்பர்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

குழந்தைகளிடம் கோமாளி வேடமணிந்து கதை சொல்லி உற்சாகப்படுத்தும் சதீஷின் பணி போற்றத்தக்கது.
- ஜானகி ரங்கநாதன், சென்னை.

‘கவிதை வன’த்தின் மூன்றுவரி கவிதை இதயத்தைத் தொட்டது.
- பூதலிங்கம், நாகர்கோவில்.

ஆராய்ச்சிப் படிப்புகளைப் பற்றிய டீட்டெய்ல்களை கல்வியாண்டு தொடக்கத்தில் டைமிங்காக சொன்ன ‘குங்கும’த்துக்கு நன்றிகள்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; நரசிம்மராஜ், மதுரை.

பணத்தைக் கடந்து, வாடிக்கையாளர்களின் திருப்தியை முக்கியமாக நினைக்கும் ராயர்ஸ் மெஸ்ஸின் குறிக்கோள், அடைதோசையை விட ஜம்மென  ருசி.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ராமகண்ணன், திருநெல்வேலி; முருகேசன், கங்களாஞ்சேரி; கோகுலகிருஷ்ணன், திருவாரூர்; வளர்மதி,  கன்னியாகுமரி; மயிலைகோபி, அசோக்நகர்.