டீ மாஸ்டரின் கல்வி உதவி!ஏழையாக இருந்தால் பிறருக்கு உதவ முடியாதா என்ன? ஒடிஷாவிலுள்ள கட்டாக்கைச் சேர்ந்த டீ மாஸ்டர் பிரகாஷ் ராவ், 75 குழந்தைகளைப் படிக்க  வைக்கிறார்!

கட்டாக்கில் ஆறு வயதிலிருந்து டீ விற்று வரும் பிரகாஷ் ராவ், கடந்த பதினேழு ஆண்டுகளாக தன் வருமானத்தில் பாதியை குடிசைப்பகுதியிலுள்ள ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செலவழித்து வருகிறார். சிறுவயதில் ‘நேரத்தை வீணாக்கும் வேலை...’ என்று சொல்லி 3வதுடன் தன்  படிப்பை நிறுத்திய தந்தையின் செயலை இப்போதும் நினைத்து வருத்தப்படுகிறார்.

‘‘என் கடையில் தினமும் ரூ.600 முதல் ரூ.800 வரை வருமானம்  கிடைக்கிறது. எனவே என்னால், பணமின்றி பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிப்பவர்களுக்கு உதவ முடிகிறது. முடிந்த வரை உணவையும் வாங்கித்  தருகிறேன்...’’ என்று சொல்லும் பிரகாஷ் ராவை, ‘மன் கீ பாத்’தில் பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார்!

ரோனி