அரசு தருகிறது ஜாமீன் பணம்!இந்திய அரசின் நீதி மற்றும் சட்டத்துறை, ஜாமீன் பணம் கொடுத்து உதவ ஆலோசித்து வருகிறது. யாருக்குத் தெரியுமா? ஜாமீன் பெற பணமின்றி  வாடும் கைதிகளுக்கு!

தேசிய குற்ற ஆவண இயக்குனரகத்தின் (NCRB) ஆய்வுப்படி, 2015ம் ஆண்டில் மட்டும் 3 லட்சம் பேர் விசாரணைக் கைதிகளாக சிறையில்  அடைபட்டுள்ளனர். ‘‘திருட்டு போன்ற சிறு குற்றங்களுக்காக சிறையில் இரண்டு ஆண்டு களுக்கு மேல் அடைக்கப்பட்டுள்ள, ஜாமீன் தொகை திரட்ட  முடியாத கைதிகளுக்கு இத்திட்டம் உதவும்!’’ என்கிறார் சட்டத்துறை அதிகாரி ஒருவர்.

இவர்களுக்கான ஜாமீன் தொகை ரூ.500 - 5000. இதைக் கட்ட  முடியாமல் 5 ஆண்டுகளுக்கும் மேல் 4 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் சிறையில் வாடுகிறார்கள். மாநில அரசுகளுடன் இணைந்து இத்திட்டத்தை  முன்னெடுக்கும் மத்திய அரசு முதல்கட்டமாக 11 ஆயிரத்து 916 ஏழை பெண் கைதிகளுக்கு ஜாமீன் வழங்கவுள்ளது.   

ரோனி