ரயில் டாக்டர்ஸ்!



வடமாநிலங்களின் சிறுநகரங்களில் 1991ம் ஆண்டு முதல் பயணித்து வரும் லைஃப்லைன் எக்ஸ்பிரஸ், கண்களின் புரை முதல் புற்றுநோய்  வரையிலான நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது. 20 பணியாளர்களையும் இரண்டு ஆபரேஷன் தியேட்டர்களையும் கொண்டு  இயங்கும் இந்த மருத்துவ ரயிலில் தன்னார்வலர்களாகப் பணிபுரியும் மருத்துவர்கள் சம்பளமாக எதையும் பெறுவதில்லை!

மருத்துவம் தவிர உள்ளூர் மருத்துவர்களுக்கு கற்பித்தலும் இந்த ரயிலில் நடைபெறுகிறது. இம்பேக்ட் இந்தியா எனும் தன்னார்வ நிறுவனம், உலக  சுகாதார நிறுவனம், யுனிசெஃப் ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் 191 இடங்களில் நோயாளிகளை அனுமதித்து ஏற்றி சிகிச்சையளிப்பதோடு  இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆபரேஷன்களையும் வெற்றிகரமாகச் செய்திருக்கிறது லைஃப் எக்ஸ்பிரஸ் மருத்துவக்குழு!  

ரோனி